தனது காதலனை தாயிடம் அறிமுகம் செய்த சுருதி! (படங்கள்)

0
131

தமிழ், தெலுங்கு, இந்தியில் பிசியாக நடித்தவர் சுருதிஹாசன். கடைசியாக அவருடைய தந்தையுடன் ‘சபாஷ் நாயுடு’ படத்தில் நடித்து வந்தார்.

தற்போது அந்த படப்பிடிப்பும் நடைபெறவில்லை. வேறு படங்களிலும் நடிக்கவில்லை. விரைவில் 2 படங்களில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே சுருதிஹாசன் லண்டனைச் சேர்ந்த அவருடைய நண்பர் மைக்கேல் கார்சல் என்பவருடன் பழகி வருகிறார்.

இருவரும் ஒன்றாக இருக்கும் படங்கள் வெளியாகி வருகின்றன. அவரை சுருதிஹாசன் காதலிப்பதாகவும் ஊடகங்களில் செய்திகள் வலம் வருகின்றன.

Shruti-haasan-1இந்த நிலையில், நண்பர் மைக்கேல் கார்சலை தனது தாயார் சரிகாவிடம் சுருதிஹாசன் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

அவரை சரிகா பூங்கொத்து கொடுத்து வரவேற்பது போன்ற புகைப்படம் வெளியாகி உள்ளது. இது, இந்தி ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.

சுருதிஹாசன் விரைவில் மைக்கேலை திருமணம் செய்ய இருக்கிறார். அதற்காகத்தான் இந்த சந்திப்பு நடந்துள்ளது என்று கூறப்படுகிறது.

இதுபற்றி சுருதிஹாசனிடம் கேட்டபோது, “தனிப்பட்ட வாழ்க்கை பற்றி எதுவும் பேச விரும்பவில்லை” என்று பதில் அளித்துள்ளார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.