சன்னி லியோன் ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி!”

0
202

முதல்முறையாக சரித்திரப் படமொன்றில் சாகஸராணி வேடத்தில் கதாநாயகியாக நடிக்கவிருக்கும் சன்னி லியோன்!

இதுவரை தமிழ் திரைப்படங்களில் பாடல் காட்சிகளில் மட்டுமே சன்னி லியோனைப் பார்த்திருப்பீர்கள்.

பாடல் காட்சிகளிலும் கூட குத்தாட்ட நாயகியாகத்தான் அவரைப் பயன்படுத்தி இருந்தார்கள். ஆனால் முதல் முறையாக தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என நான்கு மொழிப்படமாக உருவாகவிருக்கும் சரித்திரப் படமொன்றில் சன்னியை நம்பி ‘போரிடும் சாகஸ ராணியாக’ நடிக்க வைக்கவிருக்கிறார் இயக்குனர் வி.சி. வடிவுடையான்.

தற்போது அவரது இயக்கத்தில் வெளிவரத் தயாராக இருக்கும் ‘பொட்டு’ படத்தை அடுத்து தனது சரித்திரத் திரைப்படத்துக்கான வேலைகளைத் துவங்கவிருக்கிறார் அவர்.

சரித்திரப் பின்னணியுடன் கூடிய இந்த திரைக்கதையில் சன்னி லியோனை தீரமிக்க ராணி வேடத்தில் நடிக்க வைப்பதின் காரணம் என்ன? என்ற கேள்விக்கு;

தற்போது உலக அளவில் இந்தியத் திரைப்படங்களுக்கான வரவேற்பு அதிகரித்திருக்கிறது ஆகவே சன்னி லியோன் போன்ற உலகப் பிரபலத்தை தனது படத்தில் நடிக்க வைப்பதன் மூலம் படத்தை அனைத்து மொழிகளிலும் பரவலாக கவனம் பெற வைக்கலாம் என்ற எண்ணத்தில் தான் சன்னியைக் கதாநாயகி ஆக்கவிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இன்னும் பெயர் வைக்கப்படாத இந்த சரித்திரத் திரைப்படத்துக்கான கிராஃபிக்ஸ் தொழில்நுட்ப வேலைகளுக்கான பொறுப்பை 2.0 மற்றும் பாகுபலி 1& 2 திரைப்படங்களில் பணிபுரிந்த தொழிநுட்பக் குழுவினரிடம் ஒப்படைக்க பேச்சு வார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறதாம்.

அது மட்டுமல்ல, இத்திரைப்படத்தில் வில்லனாக தெலுங்கு நடிகர் நவ்தீப் நடிக்கவிருப்பதாகவும், தற்போது தான் ஏற்று நடிக்கவிருக்கும் கதாபாத்திரத்துக்குப் பொருத்தமான அளவில் தனது உடலமைப்பை கச்சிதமாக மாற்றும் வேலையில் அவர் ஈடுபட்டிருப்பதாகவும், நவ்தீவ் தவிர நடிகர் நாசரும் முக்கியமான வேடத்தில் இத்திரைப்படத்தில் நடிக்கவிருப்பதாகவும் வடிவுடையான் தெரிவித்துள்ளார்.

படத்தின் தலைப்பு மற்றும் படத்தில் பணிபுரியவிருக்கும் பிற தொழில்நுட்பக் குழுவினர் பற்றிய விவரங்கள் இன்னும் சில தினங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவிருக்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.