ம.பி. காவல் அதிகாரியின் அசத்தல் நடனம்: வைரல் வீடியோவுக்குக் குவியும் ஆதரவுகள்

0
1032

மத்தியப்பிரதேச காவல்துறை அதிகாரி ஒருவர் காவல் நிலையத்துக்குள்ளே ஆடும் அசத்தல் நடனம் தற்போது ஆல்- இந்திய வைரல் வீடியோவாக வலம் வந்துகொண்டிருக்கிறது.

மத்தியப்பிரதேசத்தின் ஹிராபூர் பகுதியில் உள்ள காவல்துறை அலுவலகத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் துள்ளல் பாலிவுட் பாடல் ஒன்றுக்கு அசத்தலாக நடனமாடியுள்ளார்.

காவல்நிலையத்திலேயே மற்றொரு காவலர் எடுத்த அந்த நடன வீடியோ தற்போது வைரலாகப் பரவி வருகிறது. இந்த நடன வீடியோவுக்கு நாடு முழுவதும் பயங்கர வரவேற்பு கிடைத்துவருகிறது.

“ஒரு காவல்துறை அதிகாரி ஆடினால் அதில் தவறு ஒன்றும் இல்லை”, “24 மணி நேரமும் மக்களுக்குச் சேவையாற்றும் காவல்துறையினருக்கு இதுபோன்ற நடனங்கள் இளைப்பாறல் போன்றது ஆகும்” என நாடு முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.