இலங்கையை துவம்சம் செய்த கோலி

0
373

 

இந்தியா – இலங்கை இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நேற்று ஆரம்பமானது..

முதலில் துடுப்பாட்டம் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 371 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

விராட் கோலி 156 ஓட்டங்களுடனும்இ ரோகித் சர்மா 1 ஓட்டங்களுடனும்க ளத்தில் இருந்தனர்.

இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடர்ந்த நிலையில், விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா பொறுமையாக விளையாடி ஓட்டங்களை சேர்த்தனர்.

இந்த ஜோடியை பிரிக்க இலங்கை பந்துவீச்சாளர்கள் எடுத்த முயற்சி எடுபடவில்லை. ஆட்டத்தின் 108 வது ஓவரில் விராட் கோலி 238 பந்துகளில் இரட்டை சதம் அடித்தார்.

238 பந்துகள் மட்டுமே சந்தித்து அவர் இரட்டை சதம் விளாசியது மிகவும் சிறப்புக்குறியதாகும்.

இதுவரை அவர் 6 முறை இரட்டை சதங்கள் அடித்து இருக்கிறார். இந்த ஆண்டில் இது அவரது மூன்றாவது இரட்டை சதமாகும்.

மறு முனையில் ரோகித் சர்மா 41 ஓட்டங்கள் எடுக்கஇ இந்திய அணி 457 ஓட்டங்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது.

ஏற்கனவே, கொல்கத்தா மற்றும் நாக்பூர் டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி சதம் விளாசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

டெஸ்ட் கேப்டனாக அதிக முறை இரட்டை சதம் அடித்தவர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.

முன்னதாக  மே.இ தீவுகள் அணியின் கேப்டனாக இருந்த லாரா 5 முறை இரட்டை சதம் அடித்ததே சாதனையாக இருந்தது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.