இந்த வார (டிசம்பர் 1 டிசம்பர் 7

0
791

ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் அவர்கள் இந்த வார (டிசம்பர் 1 டிசம்பர் 7) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.

***
மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

வருமானம் நன்றாக இருக்கும். எடுத்த காரியங்களில் படிப்படியான வெற்றிகளைக் காண்பீர்கள். உங்கள் மதிப்பு மரியாதைக்கு எந்தக் குறையும் இருக்காது. உங்கள் முன்னேற்றத்திற்குத் தடையானவர்களைக் கண்டறிந்து விலக்கி விடுவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளில் கவனத்துடன் ஈடுபடுவீர்கள். பணவரவில் இருந்த தடைகள் விலகும். வியாபாரிகள் கடுமையாக உழைத்து வருவாய் ஈட்டி முக்கிய பிரச்னைகளை சமாளித்து விடுவீர்கள். கூட்டாளிகளிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொள்ளவும். விவசாயிகளுக்கு மகசூலில் லாபத்திற்குக் குறைவு இருக்காது. நீங்கள் புதிய குத்தகைகளை எடுக்க முயற்சிக்கலாம்.

அரசியல்வாதிகளுக்கு பெயரும் புகழும் அதிகரிக்கும். உங்களின் வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். கலைத்துறையினருக்கு அதிக முயற்சிகளுக்குப்பிறகே ஒப்பந்தங்கள் கைகூடும். ரசிகர்களின் ஆதரவும் குறைந்தே காணப்படும். பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை சுமாராகவே இருக்கும். அதனால் நிதானத்துடன் செயல்படவும். மாணவமணிகள் கடினமாக உழைத்துப் படிக்கவும். காயம் ஏற்படாமல் கவனத்துடன் விளையாடவும்.

பரிகாரம்: பைரவர் வழிபாடு உகந்தது.

அனுகூலமான தினங்கள்: 1,2.

சந்திராஷ்டமம்: இல்லை.

***
ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

பொருளாதாரம் சீராக இருக்கும். எதிர்பாராத வகையில் லாபம் கிடைக்கும். விலையுயர்ந்த பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிரிகளின் பலம் குறையும். சமூகத்தில் மதிப்பு மரியாதை உயரும். ஆலய திருப்பணிகளில் ஈடுபடுவீர்கள். மனம் ஒருநிலைப்படும்.

உத்தியோகஸ்தர்களுக்கு பிரச்னைகள் நீங்கும். மேலதிகாரிகள் மனக்கசப்பு நீங்கி உங்களிடம் அன்பாக நடந்து கொள்வார்கள். வியாபாரிகளுக்கு கொள்முதல் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

கடையை நவீனப்படுத்தி புதிய வாடிக்கையாளர்களைக் கவருவீர்கள். விவசாயிகள் அதிகமாக உழைக்க வேண்டி வரும். வருமானம் கூடத் தொடங்கும்.

அரசியல்வாதிகள்புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். உங்கள் கோரிக்கைகளைத் தலைமையிடம் தெரிவித்து அமைதி காப்பது நன்று. கலைத்துறையினருக்கு நல்ல திருப்பங்கள் ஏற்படும். சக கலைஞர்களிடம் நட்புடன் பழகினால் மேலும் சிறப்படையலாம்.

பெண்மணிகள் ஆடை ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். மாணவமணிகள் நல்ல மதிப்பெண்களை அள்ளுவீர்கள். வருங்காலக் கனவுகள் நிறைவேறுவதற்கான அறிகுறிகள் தென்படும்.

பரிகாரம்: அனுமனை வழிபட்டு வரவும்.

அனுகூலமான தினங்கள்: 1,3.

சந்திராஷ்டமம்: இல்லை.

***
மிதுனம் (மிருகசீரிஷம்3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். கவலைகள் நீங்கும். குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் விலகும். உறவினர்கள் உதவி செய்ய முன்வருவார்கள். சமயோசித புத்தியால் செயற்கரிய சாதனைகளைச் செய்வீர்கள். உடல் நலத்தில் அக்கறை செலுத்தவும்.

உத்தியோகஸ்தர்கள் எவ்வளவு கடினமாக உழைத்தாலும் மேலதிகாரிகளைக் கண்டுக் கொள்ள மாட்டார்கள். அதனால் அவர்களின் நல்லெண்ணங்களுக்குப் பாத்திரமாக முயற்சிக்கவும்.

வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் நல்ல முறையிலேயே நடக்கும். வரவேண்டிய கடன்கள் வசூலாகும். விவசாயிகளுக்கு நீர்வரத்து நன்றாக இருப்பதால் பயிர்தொழில் நல்ல முறையில் அமையும்.

அரசியல்வாதிகள் அனைத்து செயல்களிலும் வெற்றியடைவீர்கள். கட்சித் தலைமையின் அதிருப்திக்கு ஆளாகாமல் இருக்க முயலுங்கள்.

கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்கள் பெறுவீர்கள். ரசிகர்களின் ஆதரவு குறைந்தே காணப்படும். பெண்மணிகள் விட்டுக்கொடுத்து நடந்து கொண்டால் வீட்டில் ஏற்படும் குழப்பங்களைத் தவிர்க்கலாம். மாணவமணிகள் படிப்பில் முழுக்கவனத்தைச் செலுத்தவும். ஆசிரியர்களிடம் பாராட்டுகளைப் பெற்று மகிழ்வீர்கள்.

பரிகாரம்: சிவபெருமானை வழிபட்டு வரவும்.

அனுகூலமான தினங்கள்: 2,3.

சந்திராஷ்டமம்: இல்லை.

***
கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

கவலைகள் குறையும். உடல் ஆரோக்கியம் சீராகும். உற்றார் உறவினர்கள் உங்களுக்கு சாதகமாக நடந்து கொள்வார்கள். பொருளாதார நிலையில் படிப்படியாக முன்னேற்றம் தென்படும். தேவையற்ற செலவுகளைக் குறைக்கவும். எவரையும் பகைத்துக் கொள்ளாமல் காரியங்களைச் செய்யவும்.

உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த நிம்மதி கிடைக்கும். மேலதிகாரிகள் உங்கள் நலனில் அக்கறை செலுத்துவார்கள். வியாபாரிகளுக்கு வருமானம் சீராக இருக்கும்.

மறைமுக போட்டிகளைச் சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள். விவசாயிகள் உற்பத்திப் பொருள்களில் நல்ல லாபத்தைக் காண்பீர்கள். கால்நடைகளால் நன்மை அடைவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு மேலிடத்தின் ஆதரவு சுமாராகத்தான் இருக்கும். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். கலைத்துறையினருக்கு வருமானம் பல வழிகளில் தேடி வரும்.

சமூகத்தில் அந்தஸ்தைப் பெறுவீர்கள். பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை சுமாராகவே இருக்கும். அதனால் நிதானத்துடன் செயல்படவும். மாணவமணிகள் அதிக அக்கறையுடன் படித்து அனைவரின் பாராட்டைப் பெறுவீர்கள்.

பரிகாரம்: துர்க்கையை வழிபட்டு வரவும்.

அனுகூலமான தினங்கள்: 2,4.

சந்திராஷ்டமம்: இல்லை.

சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

வருமானம் சீராக இருக்கும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றியுடன் முடியும். உங்களின் மதிப்பு உயரும். மனதில் இருந்த குழப்பங்கள் விலகி தெளிவு உண்டாகும். சிறு தூரப்பயணங்களால் அனுகூலம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவு குறைவாகவே கிடைக்கும். ஆகவே வேலைகளைச் திட்டமிட்டுச் செய்து முடிக்கவும். வியாபாரிகள் நண்பர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பீர்கள், புதிய முதலீடுகளால் லாபமடைவீர்கள். விவசாயிகளுக்கு மகசூல் சுமாராக இருக்கும். ஆகையால் மாற்றுப் பயிர்களைப் பயிரிட்டு பலன் பெறலாம்.

அரசியல்வாதிகளுக்கு பெயரும் புகழும் அதிகரிக்கும். கட்சி மேலிடத்தால் பாராட்டப்படுவீர்கள். கலைத்துறையினருக்கு அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும்.

பாராட்டுடன் பணமும் கிடைக்கும். பெண்மணிகளுக்கு இந்த வாரம் நல்லது கெட்டது இரண்டும் கலந்து நடக்கும் என்றாலும் மனநிம்மதி குறையாது.

மாணவமணிகள் தினமும் நன்றாக படித்து எதிர்பார்த்த மதிப்பெண்களை அள்ளுவீர்கள். விளையாட்டிலும் ஈடுபட்டு வெற்றியடைவீர்கள்.

பரிகாரம்: ஸ்ரீ ராமரை வழிபட்டு வரவும்.

அனுகூலமான தினங்கள்: 1,5.

சந்திராஷ்டமம்: இல்லை.

***
கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

பணப்புழக்கம் நன்றாக இருக்கும். சமூகத்திலும் குடும்பத்திலும் உங்கள் அந்தஸ்து உயரும். செய்தொழிலில் சமயோசிதமாக நடத்துவீர்கள். மற்றவர்களைச்சார்ந்து செயலாற்றிய நீங்கள் சுயமாகச் செயல்படும் வாரமிது. தைரியத்துடன் திட்டமிட்டு பணியாற்றுவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் தங்கள் வேலைகளைக் குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். பதவி உயர்வு பெறுவதற்கான அறிகுறிகள் தென்படும். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கல்களில் நன்மைகளைக் காண்பீர்கள். கூட்டாளிகள் சுமுகமாக நடந்து கொள்வார்கள்.

விவசாயிகள் அமோகமான விளைச்சலால் லாபத்தை அள்ளுவீர்கள். பழைய கடன்களை அடைத்த பிறகே புதிய குத்தகைகளை எடுக்கவும்.

அரசியல்வாதிகளின் பதவிக்கு இடையூறுகள் ஏற்படலாம். மாற்றுக் கட்சியினரிடமும் மனம் திறந்து பேச வேண்டாம்.

கலைத்துறையினரை மற்றவர்கள் பாராட்டுவார்கள். மனதிற்கினிய கலை நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்.

பெண்மணிகள் ஆடை ஆபரணங்கள் வாங்கும் எண்ணத்தைத் தள்ளிப்போடவும். குடும்பத்தாரிடம் சுமுகமாகப் பழகவும். மாணவமணிகள் படிப்பில் போதிய
கவனம் செலுத்தவும்.

பரிகாரம்: சனிபகவானை வழிபட்டு வரவும்.

அனுகூலமான தினங்கள்: 3,6.

சந்திராஷ்டமம்: 1,2.

***
துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். உங்கள் கடமைகளைச் சரியாகச் செய்வீர்கள். கொடுத்த வாக்கை எப்பாடுபட்டாவது காப்பாற்றி விடுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களிடம் பாசம் அதிகரிக்கும். உடன்பிறந்தோரிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் குறையும்.

உத்தியோகஸ்தர்கள் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். பணவரவு நன்றாக இருக்கும்.

சிலருக்கு நிம்மதி தரும் இடமாற்றங்கள் ஏற்படும். வியாபாரிகள் வியாபாரத்தில் கூடுதல் வருமானத்தைக் காண்பார்கள். வாடிக்கையாளர்களைத் திருப்திபடுத்த முனைவீர்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் அமோகமாக இருக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும்.

அரசியல்வாதிகள் திறந்த மனதுடன் காரியமாற்றவும். இதனால் எதிர்கட்சியினரின் தொல்லைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

கலைத்துறையினருக்கு அதிக முயற்சிகளுக்குப்பிறகே ஒப்பந்தங்கள் கைகூடும். உங்கள் திறமைகள் பளிச்சிடும். பெண்மணிகள் குழந்தைகளால் சந்தோஷமடைவீர்கள்.

குடும்பத்தின் பொருளாதாரம் சிறப்பாகவே இருக்கும். மாணவமணிகள் சீரிய முயற்சி செய்தால்தான் சராசரி மதிப்பெண்களைப் பெற முடியும்.

பரிகாரம்: அனுமனை வழிபட்டு வரவும்.

அனுகூலமான தினங்கள்: 2,5.

சந்திராஷ்டமம்: 3,4.

***
விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

நன்மைகள் அதிகரிக்கும். உங்களின் முயற்சிகள் வெற்றி பெறுவதில் தடைகள் ஏற்பட்டாலும் முடிவு நன்றாகவே இருக்கும்.

ஆன்மிகக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பொருளாதாரம் சீராக இருந்தாலும் அனாவசியச் செலவுகளைச் செய்ய வேண்டி வரும்.

உத்தியோகஸ்தர்கள் அனைத்து வேலைகளையும் திருப்திகரமாகச் செய்து முடிப்பார்கள். வருமானமும் படிப்படியாக வளரும்.

வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் சாதகமாகவே முடியும். ஆனாலும் கவனமாக இருக்கவும். விவசாயிகளுக்கு பயிர் உற்பத்தி நன்றாகவே இருக்கும். பூச்சிக்கொல்லி மருந்துக்குச் செலவு செய்ய நேரிடும்.

அரசியல்வாதிகள் கட்சி முன்னேற்றத்திற்குப் பாடுபடுவீர்கள். தொண்டர்களை அரவணைத்துச் சென்றால் மேலும் நன்மை அடையலாம். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்வார்கள்.

சக கலைஞர்கள் பாராட்டுவார்கள். பெண்மணிகள் கணவரிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொள்ளவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். மாணவமணிகளுக்கு படிப்பில் தொய்வு நிலை காணப்படுவதால் பாடங்களை கவனத்துடன் படிக்கவும்.

பரிகாரம்: முருகப்பெருமானை வழிபட்டு வரவும்.

அனுகூலமான தினங்கள்: 1,4.

சந்திராஷ்டமம்: 5,6.

***
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

வீண் அலைச்சல்கள் ஏற்படுமென்றாலும் உங்கள் மதிப்பு மரியாதைக்கு குறைவு இல்லை. குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.

உறவினர்கள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வருமானம் திருப்தி தரும். தர்மகாரியங்களில் ஈடுபடுவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் எண்ணப்படி நடந்து கொள்வீர்கள். விரும்பிய இடமாற்றத்தையும் பெறுவீர்கள்.

வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் நல்லபடியாகவே முடியும். கூட்டாளிகள் உங்களை நம்பி புதிய முதலீடுகளுக்குச் சம்மதிப்பார்கள். விவசாயிகள் சீரிய முயற்சியினால் நல்ல விளைச்சலைக் காண்பார்கள். புழு பூச்சிகளால் ஏற்படும் பாதிப்புகள் குறையும்.

அரசியல்வாதிகள் கட்சி முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டு மேலிடத்தின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். தொண்டர்களை அனுசரித்துச் செல்லவும்.

கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். கைவசம் உள்ள ஒப்பந்தங்களை முடித்துக்கொடுத்து நற்பெயர் வாங்குவீர்கள். பெண்மணிகள் சேமிப்பு விஷயங்களில் கவனமாக இருக்கவும். மாணவமணிகள் படிப்பில் மேலும் ஆர்வம்
செலுத்தவும்.

பரிகாரம்: பெருமாளை வழிபட்டு வரவும்.

அனுகூலமான தினங்கள்: 4,5.

சந்திராஷ்டமம்: 7.

***
மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

குடும்பத்தில் அமைதி நிறையும். முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். தேவைகளும் பூர்த்தியாகும். பெரும்பாலான பிரச்னைகளில் தெளிவு ஏற்படும். உற்றார் உறவினர்களின் பாராட்டையும் நன்மதிப்பையும் பெறுவீர்கள்.

பயணங்களால் நன்மைகள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும். அலுவலக வேலைகள் அனைத்தும் திட்டமிட்டபடி நடக்கும்.

வியாபாரிகள் படிப்படியாக முன்னேற்றமடைவீர்கள். கடன் வாங்காதீர்கள். புதிய முதலீடுகளும் செய்யாதீர்கள். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த மகசூல் கிடைக்கும். சக விவசாயிகளுக்கு தேவையான உதவிகளைச் செய்து மகிழ்வீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு அந்தஸ்தான பதவிகள் கிடைக்கும். தொண்டர்களும் ஆதரவாக இருப்பார்கள். கலைத்துறையினருக்கு பழைய ஒப்பந்தங்களை முடித்துக் கொடுப்பதில் சிரமங்கள் உண்டாகும்.

கலைப்பயணங்களைச் செய்வீர்கள். பெண்மணிகளுக்கு குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். குழந்தைகளாலும் சந்தோஷம் கிடைக்கும். மாணவமணிகள் படிப்பில் கவனம் செலுத்தவும்.
பெற்றோரிடம் எந்த கோரிக்கையையும் வைக்காதீர்கள்.

பரிகாரம்: ஸ்ரீ கிருஷ்ணரை வழிபட்டு வரவும்.

அனுகூலமான தினங்கள்: 2,6.

சந்திராஷ்டமம்: இல்லை.

***
கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

உங்கள் காரியங்களில் படிப்படியான முன்னேற்றம் தென்படும். பிரச்னைகள் அகலும். பொருளாதார வளம் சீராக இருக்கும்.

மதிப்பு மரியாதை அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி நிலவும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக இருக்க மாட்டார்கள்.

உத்தியோகஸ்தர்கள் இயந்திர வாழ்க்கையிலிருந்து விடுபட்டு சிந்தனைக்குச் செயல்வடிவம் கொடுப்பீர்கள்.

அலுவலக ரீதியான பயணங்கள் நன்மை தரும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் லாபகரமாகவே முடியும். கூட்டாளிகளை அதிகம் நம்ப வேண்டாம். விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். நீர்ப்பாசன வசதியைப் பெருக்கிக் கொள்வீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும். மேலிடத்தின் கவனத்தைக் கவருவீர்கள்.

கலைத்துறையினருக்கு நல்ல வருமானம் கிடைக்கும். உங்களின் பயணங்கள் அனைத்தும் நன்மையாகவே முடியும். பெண்மணிகள் பொருளாதார அபிவிருத்தியைக் காண்பீர்கள். உங்களின் கோரிக்கைகளை குடும்பத்தில் அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள். மாணவமணிகளுக்கு படிப்பில் முன்னேற்றம் தென்படும்.

பரிகாரம்: அம்பாள் தரிசனம் உகந்தது.

அனுகூலமான தினங்கள்: 3,6.

சந்திராஷ்டமம்: இல்லை.

***
மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

எடுத்த காரியங்கள் அனைத்தும் தடையின்றி நிறைவேறும். வீட்டிலும் வெளியிலும் உங்களின் பெயரும் புகழும் உயரும்.

குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். பணவரவுக்குக் குறைவு ஏற்படாது. பயணங்களாலும் நன்மை உண்டாகும். ஆன்மிகத்தில் நம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் இருந்துவந்த பிரச்னைகள் படிப்படியாகக் குறையும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு பெறுவீர்கள்.

வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் நலமாக முடியும். புதிய யுக்திகளை வியாபாரத்தில் புகுத்த நினைப்பீர்கள். விவசாயிகளுக்கு மகசூல் நல்ல முறையில் இருக்கும். பழைய குத்தகை பாக்கிகளும் வசூலாகும்.

அரசியல்வாதிகளுக்கு பெயரும் புகழும் உயரும். திட்டமிட்ட வேலைகளில் வெற்றியடைவீர்கள். கலைத்துறையினருக்கு எடுத்த காரியங்கள் அனைத்தும் நல்ல முறையில் நிறைவேறும்.

புதிய ஒப்பந்தங்களைச் செய்வீர்கள். பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை நன்றாகவே இருக்கும். மாணவமணிகள் கடினமாக முயற்சி செய்து படித்தால்தான் நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும்.

பரிகாரம்: குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

அனுகூலமான தினங்கள்: 4,6.

சந்திராஷ்டமம்: இல்லை.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.