நடிகை சன்னி லியோன், பெண் குழந்தையை தத்து எடுக்க காரணம் என்ன?

0
295

ஆபாச படங்களில் நடித்து பிரபலமான சன்னி லியோன் தற்போது இந்தி படங்களில் நடித்து வருகிறார். தமிழில், ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார்.

ஜீசம்–2, ஜாக்பாட், ராகினி எம்.எம்.எஸ். ஆகியவை சன்னி லியோன் நடித்த முக்கிய இந்தி படங்கள். சன்னி லியோன் ஆபாச நடிகை என்பதால் அவர் இந்தியாவில் இருக்க கூடாது என்று எதிர்ப்புகள் கிளம்பின.

இந்தி படங்களில் நடிப்பதற்கும் கண்டனங்கள் எழுந்தன. முன்னணி கதாநாயகர்கள் பலர் சன்னி லியோனுடன் நடிப்பதை தவிர்க்கிறார்கள்.

இந்த நிலையில் மும்பையில் 21 மாத பெண் குழந்தையை சமீபத்தில் சன்னி லியோன் தத்து எடுத்தார். அந்த குழந்தையை தனது வீட்டில் வைத்து வளர்த்து வருகிறார்.

குழந்தையை தத்து எடுத்தது ஏன்? என்பது குறித்து சன்னி லியோன் அளித்த பேட்டி வருமாறு:–

201712021331294471_1_sunny._L_styvpf‘‘எனக்கு குழந்தைகள் மீது அலாதி பிரியம் உண்டு. இதனால் அடிக்கடி ஆதரவற்ற குழந்தைகள் இல்லங்களுக்கு சென்று அவர்களுடன் நேரத்தை செலவிடுவேன். மும்பையில் உள்ள ஒரு ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்துக்கு எனது கணவர் டேனியலை அழைத்துச் சென்று இருந்தேன்.

அப்போது ஒரு குழந்தையை தத்து எடுக்க எனக்கு ஆசை ஏற்பட்டது. எனது விருப்பத்தை கணவர் ஏற்பாரா? என்ற தயக்கத்தோடு அவரிடம் தெரிவித்தேன்.

கணவர் உடனே ஒப்புக்கொண்டார். எனக்கு இன்ப அதிர்ச்சியாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. அந்த இல்லத்தில் இருந்த நிஷா என்ற குழந்தையை தத்து எடுத்தேன்.

எனது வீட்டில் குழந்தை மகிழ்ச்சியாக வளர்கிறது. நிஷா பெரிய பெண்ணாக வளர்ந்ததும் அவள் தத்து குழந்தை என்ற உண்மையை தெரிவிப்பேன்.

நான் உண்மையான தாய் இல்லை என்பதையும் சொல்வேன். நிஷாவை தத்து எடுத்த பிறகு அவளுடைய உண்மையான தாயாகவே நான் மாறி விட்டேன். குழந்தையின் ஆன்மாவோடு கலந்து இருக்கிறேன்’’.

இவ்வாறு சன்னி லியோன் கூறினார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.