யாழில் பரபரப்பு!! பட்டப்பகலில் தனியார் பஸ்சைக் கடத்திய ஆசாமி!! நடந்தது என்ன?

0
375

மன்னாரில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு பயணிகளை ஏற்றி இறக்கும் சேவையில் ஈடுபடும் தனியார் பேரூந்தினை கடத்தி செல்ல முற்பட்ட நபர் ஒருவர் மடக்கிபிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று முன்தினம்(29) இடம்பெற்றுள்ளது.இதன்போது யாழ்ப்பாணம் கொட்டடிப்பகுதியில் வைத்து பேரூந்து மீட்கப்பட்டதுடன், யாழ்ப்பாணம் பொம்மைவெளியை சேர்ந்த குறித்த நபர் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது;

k.p.n.-travelsஈ.ஆர். 7811 இலக்க மன்னார் மாவட்டத்திற்குச் சொந்தமான பேரூந்து மன்னாரில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு பயணிகளை ஏற்றி வந்த நிலையில், பயணிகள் அனைவரையும் இறக்கி விட்டு காத்திருப்பு நேரத்திற்காக யாழ்ப்பாணம் முற்றைவெளிப் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதன்பின்னர் பேரூந்தினை நிறுத்திவிட்டு சாரதியிம் நடத்துநரும் மதிய போசணத்திற்காக உணவகம் ஒன்றிற்குச் சென்றுள்ளனர்.

இதனை அவதானித்த பொம்மைவெளிப் பகுதியை சேர்ந்த ஓர் இளைஞர், பேரூந்து தரிப்பு நிலையத்தில் நிறுத்தி வைத்திருந்த குறித்த பேரூந்தினை திறப்பு இன்றி களவாடிச் சென்றுள்ளார்.

இந்நிலையில், கடத்தி செல்லப்பட்ட குறித்த பேருந்து ஓர் சகதியில் புதையுண்ட காரணத்தினால் வகையாக மாட்டிக்கொண்டார்.இவ்வாறு பேரூந்து புதையுண்ட சமயம் அப்பகுதியால் பயணித்த ஏனைய பேரூந்து உரிமையாளர்கள் பேரூந்தின் சாரதியோ அல்லது நடத்துநரோ இன்றி பிறிதொருவர் பேரூந்தினை செலுத்துவதனைக்கண்டு சந்தேகமடைந்தனர்.

இதனையடுத்து சாரதிக்கு தொலைபேசி அழைப்பு எடுத்தபோதே, சாரதி நிலமையை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்தார்.

இதன்போது பேரூந்தினை களவாட முயன்றவர் கையும் களவுமாக வகையாக மாட்டிக்கொண்டார்.

அகப்பட்ட திருடன் நன்கு கவனிக்கப்பட்ட நிலையில் சாரதி மற்றும் நடத்துநர்களால் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் பேரூந்தினை களவாட முயன்ற குறித்த இளைஞரை கைதுசெய்தனர்.இதேவேளை யாழ் நகரில் பட்டப்பகலில் பேரூந்தினையும் களவாட முயன்றமை பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.