இராணுவ உடையில் கலக்கும் கமல்…

0
475

கமல்ஹாசன் இயக்கி நடித்து கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான படம் `விஸ்வரூபம்’.

இரு பாகங்களாக உருவான இந்த படத்தின் முதல் பாகம் நல்ல வரவேற்பை பெற்றது. முதல் பாகத்தின் படப்பிடிப்பின் போதே இரண்டாவது பாகத்திற்கான 90 சதவீத காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில், மீதமிருக்கும் காட்சிகளை படமாக்குவதில் பிரச்சனை ஏற்பட்டது.

இதனால் சில வருடங்கள் கிடப்பில் போடப்பட்ட `விஸ்வரூபம்-2′ படப்பிடிப்பை கமல் ஹாசன் சமீபத்தில் தொடங்கியிருக்கிறார்.

சென்னை ஓ.டி.ஏ இராணுவ முகாமில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வரும் நிலையில், கமல் படக்குழுவினருடன் சேர்ந்து இராணுவ உடையில் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. இதுகுறித்து கமல் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, கடைசி கட்டத்தில் `விஸ்வரூபம்-2′. சென்னை ஓ.டி.ஏ. இந்தியாவையும், தன்னையும் பெருமைப்படுத்துகிறது.

இந்தியாவிலேயே இங்கு மட்டும் தான் பெண்களுக்கு ராணுவ பயிற்சி அளிக்கப்படுகிறது. பெண்களுக்கு எனது மரியாதையை செலுத்திக் கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

`விஸ்வரூபம்-2′ படத்தின் டிரைலர் தயாராகி இருக்கும் நிலையில், இந்த மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. படம் வருகிற ஜனவரி 26-ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம் இன்டர்நேஷனல் தலைப்பில் உருவாகும் `விஸ்வரூபம்-2′ படத்தில், பூஜா குமார், ஆண்ட்ரியா, ராகுல் போஸ், சேகர் கபூர் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.