ஜெயலலிதாவின் மகளை பற்றி சசி, நடராசனுக்கு தெரியும்! ஜெ. அண்ணன் பேட்டி

0
950

கர்நாடக மாநிலம் மைசூர் ஶ்ரீரங்கராஜபுரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன், “ஜெயலலிதாவிற்கு மகள் இருக்கிறார். அது பற்றிய முழு விவரம் சசிகலாவிற்கும், நடராஜனுக்கு தான் தெரியும்” என்று அதிர்ச்சி கிளம்புகிறார்.

இதுபற்றி வாசுதேவன் நம்மிடம், ”நான் ஜெயலலிதாவின் தந்தை ஜெயராமனுக்கும் அவரது முதல் மனைவியான ஜெயம்மாளுக்கும் பிறந்த ஒரே மகன் வாசுதேவன்.

அந்த முறையில் எனக்கு ஜெயலலிதா தங்கை ஆகிறார். என்னுடைய தந்தையின் இரண்டாவது மனைவி வேதம்மாள் என்கிற சந்தியா. அவர்களுக்கு பிறந்தவர்கள் ஜெயக்குமார், ஜெயலலிதா.

ஜெயலலிதாவின் அம்மா வேதம்மாளுக்கும் சினிமா ஆர்ட் டைரக்டர் தாமோதரப்பிள்ளைக்கும் பிறந்த மகள் சைலஜா என்று மீடியாவில் வந்தது.

அதையடுத்து நான் சைலஜாவை சந்திக்க நினைத்தேன். ஆனால் ஏழ்மையும், வயது முதிர்ச்சியின் காரணமாகவும் அவரை நான் சென்று சந்திக்க முடியவில்லை.

ஆனால் என்னை பற்றி அறிந்த சைலஜா குடும்பத்தோடு என்னை பார்க்க வந்திருந்தார்.

அவருடைய பிறப்பு, குடும்ப வரலாறு அனைத்தையும் என்னிடம் பகிர்ந்து கொண்டார். அவர் சொன்ன அனைத்தும் உண்மையாக இருந்ததால். அவர் நிச்சயம் ஜெயலலிதாவின் தங்கை என்பதை உணர்ந்தேன்.

அவரோடு அமிர்தாவும் வந்திருந்தார். சைலஜா தன்னுடைய மகள்  அமிர்தாவை என்னிடம் அறிமுகம் செய்தார். அதன் பிறகு என் குடும்பத்திற்கும், சைலஜா குடும்பத்திற்கும் நெருக்கம் ஏற்பட்டது.

சைலஜா உடல் நிலை சரியில்லாமல் மரணம் அடைந்தார். அவர் மரணத்திற்கு என்னுடைய தம்பி சென்று அனைத்து காரியங்களையும் செய்து வந்தார்.

மார்ச் மாதம் அமிர்தாவின் தந்தை பார்த்தசாரதியும் மரணம் அடைந்தார். பார்த்தசாரதி மரணப்படுக்கையில் இருந்த போது 4 நாட்கள் பெங்களூரு அமிர்தா வீட்டில் இருந்தேன்.

அப்போது எங்கள் தந்தையின் உறவினர்களான ரஜினிநாத், லலிதாவை அமிர்தாவிற்கு அறிமுகம் செய்து வைத்தேன். ரஜினிநாத்தின் மகள் அமெரிக்காவில் இருக்கிறார்.

அவர் வீட்டிற்கு அமிர்தா சென்று வந்தார். தற்போது என்ன காரணமோ தெரியவில்லை. இவர்கள் அனைவரும் கூட்டுச் சேர்ந்து அமிர்தாவை ஜெயலலிதாவின் மகள் என சொல்லி இருக்கிறார்கள்.

இது தவறான தகவல். ஜெயலலிதாவிற்கு லலிதா பிரசவம் பார்த்தார் என்று சொல்லுவது தவறான தகவல் ஏனென்றால் ஜெயலலிதா எங்கள் குடும்ப உறுப்பினர்கள் யாரோடும் தொடர்பு வைத்துக் கொள்ளவில்லை.

ஆனால் இளமை காலத்தில் அடிக்கடி சென்னை வருவேன். நம்பியா -ருக்மணி, சிவாஜி -கமலா, நடிகை ராஜ சுலோக்‌ஷனா என சென்னையில் பலரையும் தெரியும்.

அவர்கள் என்னிடம் ஜெயலலிதாவிற்கும் ஷோபன்பாபுவிற்கும் ஹைதராபாத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்ததாக சொல்லி இருக்கிறார்கள். பிறகு ஹைதராபாத் திராட்சை தோட்டத்தில் வளர்க்கப்பட்டு பாரீனில் திருமணம் செய்து கொடுத்துள்ளதாக கேள்விப்பட்டேன்.

ஆனால் அனைத்து உண்மைகளும் சசிகலாவிற்கும், நடராசனுக்கும் நிச்சயம் தெரியும். அவர்கள் தமிழக மக்களுக்கும் ஜெயலலிதாவின் உறவினர்களாகிய எங்களுக்கும் சொல்ல வேண்டும்” என்றார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.