11 வயது மாணவன் மர்ம மரணம்!!, கோழிக் கூண்டிலிருந்து சடலம் மீட்பு : நிந்தவூரில் சம்பவம்

0
354

நிந்தவூர்- 9ஆம் பிரிவைச் சேர்ந்த தரம் 6இல் கலவ்வி கற்கும் மாணவன் ஒருவர் அவரது வீட்டிலுள்ள கோழிக் கூண்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

முகம்மது பாயிஸ் முகம்மது நிஹாஜ் (வயது 11) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதுபற்றித் தெரியவருவதாவது:-

நிந்தவூர் அல்-மினா வித்தியாலயத்தில் 6ஆம் தரத்தில் கல்வி பயின்று வரும் மாணவன் முகம்மது பாயிஸ் முகம்மது நிஹாஜ், நேற்று இறுதியாண்டுப் பரீட்சை எழுதி விட்டு முற்பகல் சுமார் 11.30 மணியளவில் வீடு சென்றுள்ளார்.

வீட்டிலுள்ள ஏனைய பிள்ளைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தவர் பகலுணவு வேளையில் காணாமல் போயுள்ளார்.

20171129_213818_30112017_KAA_CMYபின்னர் அவரைத் தேடியலைந்து இறுதியில் அவரது வீட்டுக் கிணற்றடியில் அமைக்கப்பட்டுள்ள கோழிக் கூண்டினுள் பார்த்த போது அங்கு அவரது உயிரற்ற உடல் காணப்பட்டதாகவும், அதனை உடன் வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றதாகவும் மறணித்த நிஹாஜ்ஜின் தாயின் தாயார் தெரிவித்தார்.

மரணித்த நிஹாஜ்ஜின் தாயும், தந்தையும் வெளவேறு திருமணங்கள் முடித்துக் கொண்டு, பிரிந்து வாழ்வதால் நிஹாஜ் சிறுவயதிலிருந்தே தனது தாயின் தாய், தாயின் தந்தை அவர்களிடமே வளர்ந்து வந்துள்ளார் என்பது தெரியவருகிறது.

நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்படடுள்ள நிஹாஜின் ஜனாஸாவை சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற பதில் நீதிபதி ஏ.எம்.நசீல், சம்மாந்தறை பொலிசார் சகிதம் வருகை தந்து சிறுவனின் சடலத்தைப் பார்வையிட்டதோடு, அவரது வீட்டுக்கும் சென்று அவர் மரணமாகிய கோழிக் கூட்டையும் பார்வையிட்டதோடு, உறவினர், அயலவர்களையும் விசாரணை செய்த பின்னர் பிரேத பரிசோதனைக்காக உத்தரவிட்டார்.

மேலதிக விசாரணைகளை சம்மாந்துறைப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.