சமஷ்டியைத் தராவிட்டால் தமிழர்கள் தனிநாடு கோருவார்கள்!!- ஆஸி தூதுவரிடம் முதலமைச்சர் தெரிவிப்பு!!

0
841

அவுஸ்திரேலியா போன்று சமஷ்டி அதிகாரப் பகிர்வையே தமிழ் மக்கள் கோரு கின்றனர்.

அதனை வழங்கினால் தமிழர்கள் தனிநாடாகப் பிரிந்து சென்று விடுவார் களோ என்ற ஐயம் தென்னிலங்கை ஆட்சியாளர்களிடம் உண்டு.

ஆனால் சமஷ்டித் தீர்வை வழங்காவிட்டால்தான் தனிநாட்டை கோரும் அவசியம் தமிழர்களுக்கு ஏற்படும்.

இவ்வாறு அவுஸ்திரேலியத் தூதுவரிடம் எடுத்துரைத்தார் வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன்.

சமஷ்டியை தந்தால் தனிநாடு கோர மாட்டோம் என இலங்கைக்கான அவுஸ்திரே லிய தூதுவர் பிரைஸ் ஹட்ச்செசனிடம் வடக்கு மாகாண முதலமைச்சர்சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் யாழ்ப் பாணம் வருகை தந்த தூதுவர் முதலமைச் சரை அவரது அலுவலகத்தில் நேற்று காலை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இதன் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பிரைஸ் ஹட்ச்செசன்; என்னை சந்திக்க வந்திருந்தார்.

டயலொக் என்ற நிறுவனத்துடன் அவுஸ்தி ரேலிய அரசாங்கம் உடன்படிக்கை ஒன்றை செய்துள்ள தாகவும், அதன்படி பின்தங் கிய கிராமங்களில் ஏரிஎம் இல்லாத பிரதேசங் களில் தொலைபேசி மூலமே பணப்பரி மாற்றங்களை செய் வதற்கு அந்த தொலை பேசி நிறுவனம் வசதி களை செய்து கொடுத் துள்ளன.

வருங்காலத் தில் இதற்குரிய அலு வலகத்தினை நிறுவு வார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய அரசு எமக்கு அதிக மான உதவிகளை செய்து வருவதை சுட்டி காட்டி நன்றி கூறியிருந் தேன்.

இதே போன்று நியதி சட்டம் தொடர் பிலும் பல்வேறு உதவி களை மேற்கொண்டு வருகின்றனர்.

தகை மை விருத்திக்கான கருத்தமர்வுகளையும் ஆசியா பவுண்டே சன் அவுஸ்திரேலிய நிதியுதவியுடன் நடத்தி யிருந்தார்கள்.

ஆசிய நிறுவனத்துடனான ஒப்பந்தம் இந்த வருடத்துடனும் நிறைவுறு வதாக சுட்டிக்காட்டி அதனை அடுத்த வருட மும் நீடிக்குமாறு கேட்டிருந்தேன். அதற்கு அவர் சம்மதம் தெரிவித்திருந்தார்.

அரசியல் ரீதியான விடயங்களை பேசும் போது அவுஸ்திரேலியாவில் உள்ளூராட்சி அலகு, மாகாண அலகு, சமஷ்டி அலகு உள்ளது, அங்கு எவ்வாறு ஒவ்வொரு மாகாண மக்களும் சமஷ்டியுடன் சுதந்திரமாக இருந்து வருகின்றார்கள் என்பதை சுட்டிக்காட்டி, அதனை தான் இங்கு நாங்கள் கேட்கின்றோம்.

ஆனால் அரசாங்கம் எவ்வாறு முட்டுக்கட்டையாக இருந்து வருகின்றது கூறியிருந்தேன்.

தனிநாடு எடுத்து கொண்டு சென்று விடுவார்கள் என்ற பயத்தில் தான் அவர்கள் இவற்றை தருகின்றார்கள் இல்லை.

எனினும் இவற்றை தராமல்விட்டால் தான் தமிழர்கள் தனிநாடு கோருவார்கள் என்பதனையும், எங்களுடைய சுய ஆட்சிக்கு இடையூறாக இல்லாவிட்டால் தனிநாடு கோர வேண்டிய அவசியம் எமக்கு ஏற்படாது என்ற யதார்த்தத்தையும் அவருக்கு எடுத்து காட்டி யிருந்தேன்.

மேலும் தனியார்துறை விருத்தி தொடர் பில் ஆராய்ந்திருந்தோம். சுற்றுலாத்துறை சம்பந்தமாக பல விடயங்களை பேசியிருந்தோம்.

அவுஸ்திரேலிய நிபுணர் அன்ட்ரூ பெய்லி இலங்கை அரசுக்கு சுற்றுலாத்துறை தொடர்பில் ஆலோசனைகளை வழங்கு வதாக கூறியிருந்தார்.

அவரை வடக்கு மாகா ணத்திற்கும் அனுப்பி ஆலோசனை வழங்கு வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரினேன்.

அதனையும் அவர் ஏற்றுக் கொண் டார் என முதலமைச்சர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.