பேஸ்புக்கில் ஒவ்வொரு லைக்குகளுக்கும் மனைவியின் முகத்தில் ஒவ்வொரு குத்து!! கொடூரமாக தாக்கிய கணவர்!!

0
2360

உருகுவே நாட்டில் அஸன்சியன் பகுதியில் இளம்பெண் ஒருவர் பேஸ்புக்கில் தமது புகைப்படத்திற்கு அதிகம் லைக் வாங்கியதால் ஆத்திரம் கொண்ட அவரது கணவர் முகத்தை கொடூரமாக சிதைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அஸன்சியன் பகுதியில் குடியிருக்கும் 21 வயதுடைய Adolfina Camelli Ortigoza என்பவர் பேஸ்புக்கில் தனது புகைப்படங்களை பதிவேற்றுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இது அவரது 32 வயதுடைய கணவருக்கு தம்மை விட தமது மனைவி பேஸ்புக் பதிவுகளுக்கு அதிக லைக்குகள் பெறுவதை பொறுத்துக் கொள்ளாது, மனைவி பேஸ்புக்கில் பெறும் ஒவ்வொரு லைக்குகளுக்கும் முகத்தில் கொடூரமாக தாக்கத் துவங்கியுள்ளார்.

இது ஒருகட்டத்தில் குறித்த இளம்பெண்ணின் முகத்தை சிதைக்கும் அளவுக்கு சென்றுள்ளது. அது மட்டுமின்றி படுகாயம் அடைந்த அவரை அறைக்குள் இட்டு பூட்டியும் வைத்துள்ளார்.
46C9769300000578-0-image-m-35_1511946428119இந்த விவகாரம் குறித்த இளம்பெண்ணின் தோழிக்கு தெரிய வரவே, அவர் அளித்த முறைப்பாட்டின் பேரில் வீட்டில் சிறை வைக்கப்பட்டிருந்த குறித்த இளம்பெண்ணை பொலிஸார் மீட்டுள்ளனர்.

46C9768F00000578-0-Shocking_The_young_woman_was_found_covered_in_bruises_after_cons-m-34_1511946402148பொலிஸாரால் மீட்க்கப்படும்போது அவரது உதடுகள் பிய்ந்து, முகம் உருவம் தெரியாத அளவுக்கு சிதைக்கப்பட்டிருந்தது. வலியால் வாய்விட்டு கதறாமல் இருக்க தாக்குவதற்கு முன்னர் மனைவியின் வாய்க்குள் துணியை அடைத்து வைத்து தாக்கியுள்ளார்.

இந் நிலையில் அந்த நபரின் தந்தை தமது மகனின் கொடூர நடவடிக்கையில் மனம் நொந்து பொலிஸாருக்கு நடந்தவற்றை புகாராக அளித்துள்ளார்.

இதனையடுத்து குறித்த நபரை கைது செய்துள்ள பொலிஸார் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிந்து, நீதி மன்றில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

நீதிமன்ற விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 30 ஆண்டுகள் வரை சிறை தண்டனை உறுதி என கூறப்படுகிறது.

46C9768300000578-0-image-a-32_1511946342549Evil: Galeano later took control of her Facebook page, where he would post pictures of her, and continued to punch and kick her for every ‘like’ the posts received

46C9769E00000578-0-image-a-29_1511946329365Abused: Adolfina Camelli Ortigoza, 21, from Nemby, Uruguay, was ‘punished’ by her husband every time she got a positive reaction to one of her photos or posts on Facebook

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.