சிசுவை அமுக்கி கொன்றவர்களுக்கு பொலிஸார் வலைவீச்சு

0
839

19 வயதான குடும்பப் பெண்ணை வல்லுறவுக்கு உட்படுத்துவதற்கான முயற்சி தோல்வியடைந்ததையடுத்து, அந்த முயற்சி கைகூடாமையால், அவரிடமிருந்த,  இரண்டு மாதங்களும் 21 நாட்களுமேயான பெண் சிசுவை, அபகரித்து நீர்நிரம்பிய பெரலுக்குள் மூழ்கடித்துக் கொலைச் செய்த சந்தேகநபர்கள் இருவரையும் தேடி, கதிர்காமம் பொலிஸார் வலைவீசியுள்ளனர்.

“கதிர்காமம் மெனிக்புர கிராமத்தைச் சேர்ந்த  ஜயனி சந்ரேகா (வயது 22) என்ற பெண், தனது  சிசுவுடன் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

image_249ea761dbஇதன்போது, பெண்ணின் வீட்டினுள் நுழைந்த இருவர், அப்பெண்ணிடம் இருந்து சிசுவை பறித்தெடுத்துள்ளதுடன், குறித்த பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்டுபத்த முயன்றுள்ளனர்.

எனினும் சுதாகரித்துக்கொண்ட பெண், அவர்களது பிடியிலிருந்து தப்பியுள்ளதுடன், வெளியே வந்து கூக்குரலிட்டுள்ளார். பெண்ணின் கூக்குரலைக் கேட்டு அயலவர்கள் அவ்விடத்தில் ஒன்றுகூடியதால் மேற்படி இருவரும் சிசுவை, நீர் நிரம்பிய பெரலுக்குள் அமிழ்த்திவிட்டு, முச்சக்கர வண்டியில் தப்பிச் சென்றுள்ளனர்.

அயலவர்களின் உதவியுடன் சிசுவைத் தேடிய அந்தப் பெண், பெரலுக்குள்ளிருந்து சிசுவை, சடலமாக மீட்டுள்ளார்.

அதனையடுத்தே, இந்த விவகாரத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் இருவருக்கு எதிராக வலைவீசப்பட்டுள்ளதென பொலிஸார் தெரிவித்தனர்.

மீன் வியாபாரியான தனது கணவரிடம் மீனை பெற்றுக்கொண்ட இரு இளைஞர்கள், பணத்தை செலுத்துவதற்காக தனது வீட்டுக்கு வந்ததாகவும், தனது கணவர் வீட்டில் இல்லாததைத் தெரிந்துகொண்டு அவ்விருவரும் இவ்வாறு தன்னை வன்புணர்வுக்கு உட்படுத்த முயன்றதாகவும் அப்பெண் பொலிஸில் வாக்குமூலமளித்துள்ளார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.