இராணுவ வீரரான காதலனுடன் உல்லாசம் அனுபவிப்பதற்கு விரும்பாத யுவதி மோட்டார் சைக்கிளிலிருந்து பாய்ந்து காயம்

0
1348

காதலன் தன்னை ஏமாற்றி உல்­லாசம் அனு­ப­விப்­ப­தற்­காக விடுதி ஒன்­றுக்கு அழைத்து செல்­வ­தற்கு மறுப்புத் தெரி­வித்த யுவதி ஒருவர், பய­ணித்துக் கொண்­டி­ருந்த மோட்டார் சைக்­கி­ளி­லி­ருந்து பாய்ந்து படு­கா­ய­ம­டைந்த நிலையில் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­தாக கேகாலை பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

சம்­ப­வத்தில் 21 வய­தான யுவ­தியே காய­ம­டைந்­துள்­ள­தா­கவும், அவ­ரது காத­ல­னான வெல்­ல­வாய பிர­தே­சத்தைச் சேர்ந்த இரா­ணுவ வீரர் ஒரு­வரை கைது செய்­துள்­ள­தா­கவும் பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

இவ்­வி­ரு­வரும் நீண்­ட­கா­ல­மாக காத­லித்து வந்­துள்ள நிலையில், நேற்று முன்­தினம் பிற்­பகல் இரு­வரும் கேகாலை நகரில் சந்­தித்­துள்­ளனர். அதன்­போது, தனது காத­லி­யிடம் குறித்த இரா­ணுவ வீரர், முதலில் அமை­தி­யான இட­மொன்­றுக்கு சென்று பேசிக் கொண்­டி­ருப்போம் என தெரி­வித்­துள்ளார்.

நக­ரி­லுள்ள பூங்கா ஒன்­றுக்கு காதலன் தன்னை அழைத்துச் செல்வார் என்ற எண்­ணத்தில் யுவ­தியும் சம்­மதம் தெரி­வித்­துள்ளார்.

அதன்­பின்னர் அவர் குறித்த யுவ­தியை தனது மோட்டார் சைக்­கிளில் ஏற்­றிக்­கொண்டு, பூங்­காவை நோக்கி செல்­லாமல் வேறு திசை­யாக பய­ணித்­துள்ளார்.

பூங்­கா­வுக்கு செல்­லாமல் எங்கு செல்­கிறீர் என யுவதி வின­வவே, ‘அங்கு செல்­வதால் எவ்­வித பயனும் இல்லை நாம் விடுதி ஒன்­றுக்கு செல்வோம் என தெரி­வித்­துள்ளார்.

அதன்­போது தனது காத­லனின் சூட்­சு­மத்தை அறிந்து கொண்ட யுவதி, விடு­திக்கு செல்­வ­தற்கு மறுப்பு தெரி­வித்­துள்ளார். எனினும், யுவ­தியின் பேச்சைக் கேட்­காமல், விடாப்­பி­டி­யாக மோட்டார் சைக்­கிளை நிறுத்­தாது இரா­ணுவ வீரர் பய­ணத்தை தொடர்ந்­துள்ளார்.

காத­ல­னி­ட­மி­ருந்து தப்­பிப்­ப­தற்­காக யுவதி கூச்­ச­லிட்­ட­துடன், காத­லனை கெஞ்சிக் கேட்டு அங்கு செல்­ல­வேண்டாம் எனப் போராடி தன்னால் இய­லாத கட்­டத்தில், அர­ணா­யக்க – கல்­பொக்க பிர­தே­சத்தில், பய­ணித்துக் கொண்­டி­ருந்த மோட்டார் சைக்­கி­ளி­லி­ருந்து கீழே பாய்ந்­துள்ளார் என்றும் விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளன.

அத­னை­ய­டுத்து, அவ­ரது காதலன் அயலில் இருந்­த­வர்­களின் உத­வி­யுடன், படு­கா­ய­ம­டைந்த யுவ­தியை கேகாலை பொது வைத்­தி­ய­சா­லைக்கு அழைத்துச் சென்று அனு­ம­தித்­துள்ளார்.

சம்­பவம் தொடர்பில் கிடைத்த முறைப்­பா­டொன்­றுக்­க­மைய சந்தேக நபரான இராணுவ வீரரை கைது செய்ததுடன் அவரது மோட்டார் சைக்கிளையும் கேகாலை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கேகாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.