இந்தியா – இலங்கை இடையிலான இரண்டாவது டெஸ்ட்: 610 ரன்கள் எடுத்து இந்தியா டிக்ளேர் செய்தது!

0
465

இந்திய இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி நாக்பூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. தனது முதல் இன்னிங்ஸில் இந்திய அணி, 6 விக்கெட்டுகளுக்கு 610 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது.

இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் டிரா ஆன நிலையில் தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்று முதலில் ஆடிய இலங்கை அணி 205 ரன்களுக்கு சுருண்டது.

அதன் பின்னர் களமிறங்கிய இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 312 ரன்கள் எடுத்தது.

புஜாரா மற்றும் கோலி களத்தில் இருந்தனர். இரண்டாம் நாள் ஆட்டத்தின்போது, முரளி விஜய் சதம் விளாசினார்.

இன்று மூன்றாவது நாள் ஆட்டம் நடந்தது. துவக்கம் முதலே கோலி அதிரடியாகவும், புஜாரா நிதானமாகவும் ஆட்டத்தை தொடர்ந்தனர்.

இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இலங்கை பந்துவீச்சாளர்கள் திணறினர். சிறப்பாக ஆடி வந்த புஜாரா, 143 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து, அதிரடியாக விளையாடிய கோலி இரட்டை சதம் விளாசி, 213 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இதையடுத்து, களமிறங்கிய ரோஹித் ஷர்மாவும் சதமடித்தார். இதற்கு பின்னர் கோலி, டிக்ளேர் செய்வதாக அறிவித்தார்.

டிக்ளெர் செய்யும்போது இந்திய அணியின் ஸ்கோர், 6 விக்கெட்டுகளுக்கு 610 ரன்களாக இருந்தது.

தற்போது இந்திய அணியின் லீட் ஸ்கோர் 405 ரன்களாக உள்ளது. தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளது இலங்கை அணி.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.