“கார்த்திகை மாத எண்ஜோதிட பலன்களை படித்துவிட்டீர்களா?”

0
1123

 

1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

தனது தோரணையாலும் சாமர்த்தியத்தினாலும் வெற்றி பெறும் ஒன்றாம் எண் அன்பர்களே இந்த  வாரம் சுணங்கிக் கிடந்த காரியங்களில் இருந்து வந்த தேக்க நிலை அடியோடு மாறும்.

காரியங்களில் இருந்து வந்த தடை தாமதம் நீங்கும். முயற்சிகளில் உடனடியாக பலன் காண முடியும்.

எந்த ஒரு வேலைக்கும் சிறிது முயற்சியினால் நன்மைகள் கிடைக்கும். தொழில் வியாபாரம் நிறைவான லாபம் வரக் காண்பீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் மேல் அதிகாரிகளின் சொல்படி நடப்பது நல்லது. மேலதிகாரிகள், சக ஊழியர்கள் உங்களுக்கு அனுசரனையாக நடந்து கொள்வார்கள்.

குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் நன்மை அளிக்கக்கூடிய வகையில் இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது.

பெண்களுக்கு எந்த ஒரு வேலைக்காகவும் கூடுதலாக அலைய வேண்டி இருக்கும். அரசியல்வாதிகளுக்கு சங்கடங்கள் குறையத் தொடங்கும். கலைத்துறையினருக்கு திறமைக்கேற்ற புகழும், கௌரவமும் கட்டாயம் கிடைக்கும். மாணவர்களுக்கு எதிர்கால கல்வியை பற்றி சிந்தனை மேலோங்கும். கூடுதல் நேரம் ஒதுக்கி படிப்பது வெற்றிக்கு உதவும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்

அனுகூலமான திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமைகளில் வில்வ அர்ச்சனை செய்து சிவனை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். முயற்சிகள் வெற்றிபெறும்.

2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

சிறு விஷயத்திலும் உணர்வுப் பூர்வமாக செயல்படும் இரண்டாம் எண் அன்பர்களே இந்த வாரம் வாக்கு வன்மையால் நன்மை உண்டாகும்.

செய்யும் காரியத்தை சிறப்பாகவும், நேர்மையாகவும் செய்து முடித்து மற்றவர்களிடம் பாராட்டு பெறுவீர்கள். எதிர்ப்புகள் விலகும். தடைபட்டிருந்த வீடு கட்டும் பணிகள் நிறைவடையும். தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் வேகம் பிடிக்கும்.

தொழிலை விரிவுபடுத்த எடுத்த முயற்சிகள் வெற்றி பெறும். உத்தியோகஸ்தர்கள் வேலை பளு இருந்தாலும் எல்லா பணிகளையும் திறம்பட செய்து முடிப்பார்கள்.

குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். கடன் பிரச்சனையில் நீண்ட நாட்களாக இருந்து வந்த சுணக்க நிலை மாறும்.

பெண்களுக்கு காரிய தடைகள் நீங்கும். அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை தொண்டர்களின் ஆதரவுடன் செயற்கரிய செயல்களைச் செய்வீர்கள்.

கலைத்துறையினர் கடினமாக உழைத்தால் வெற்றி வாகை சூடலாம். மாணவர்களுக்கு படிக்காமல் விட்ட பாடங்களை படிப்பதில் கவனம் செலுத்துவீர்கள். சொன்ன சொல்லை காப்பாற்ற பாடுபடுவீர்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி

அனுகூலமான திசைகள்: வடக்கு, வடமேற்கு

அதிர்ஷ்ட எண்கள்: 2, 3

பரிகாரம்: ஆதிபராசக்திக்கு வேப்பிலை அர்ப்பணித்து வழிபட்டு வருவது காரிய தடையை நீக்கும். எதிர்ப்புகள் அகலும்.

3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

தனது ஒழுக்கத்தால் அனைவரையும் கவர்ந்திழுக்கும் மூன்றாம் எண் அன்பர்களே இந்த வாரம் பணவரத்து அதிகரிக்கும்..

எடுத்த காரியத்தை செய்து முடிக்க இருந்த தாமதம் நீங்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற மிகவும் பாடுபட வேண்டி இருக்கும். அடுத்தவருக்கு செய்யும் உதவிகள் சில நேரத்தில் உங்களுக்கு எதிராகவே மாறலாம் கவனமாக செயல்படுவது நல்லது.

தொழில் வியாபாரம் வேகமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவது ஆறுதலை தரும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது வேகமெடுக்கும்.

உத்தியோகஸ்தர்கள் தங்களது பணிகளை சிரத்தையாக கவனிப்பது நல்லது. மேல் அதிகாரிகள் சக பணியாளர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும்.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. உறவினர்கள் நண்பர்கள் அனுசரனையுடன் இருப்பார்கள்.

பெண்களுக்கு எதிலும் காலதாமதம் உண்டாகும். அரசியல்வாதிகளுக்குப் பெயரும், புகழும் அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் குறைவாகவே இருக்கும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் மெத்தனம் காட்டாமல் இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி

அனுகூலமான திசைகள்: கிழக்கு, தென்மேற்கு, வடகிழக்கு

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 6

பரிகாரம்: தட்சிணாமூர்த்திக்கு நெய்தீபம் ஏற்றி கொண்டைக்கடலை சுண்டல் நைவேத்தியம் செய்து விநியோகம் செய்ய செல்வம் சேரும். மன அமைதி உண்டாகும்.

4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

தேனீக்கள் போல் எப்போது சுறுசுறுவென்று இருக்கும் நான்காம் எண் அன்பர்களே இந்த வாரம் மனதில் துணிச்சல் அதிகரிக்கும். எடுத்த காரியங்களை வெற்றியுடன் செய்து முடிப்பீர்கள். எங்கும் எல்லோரிடத்திலும் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பலரும் உங்களை தேடி வருவார்கள். அடுத்தவர்களுக்காக உதவிகள் செய்வதில் உற்சாகம் உண்டாகும். வழக்கு விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும்.

தொழில், வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். துணிச்சலாக எடுக்கும் முடிவுகள் வெற்றியை தரும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் முன்னேற்றம் ஏற்படும். மேல் அதிகாரிகள் மூலம் நன்மை கிடைக்க பெறுவீர்கள். சக ஊழியர்கள் உங்களை அனுசரித்து செல்வது மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும்.

குடும்பத்தில் சந்தோஷமும் மன நிம்மதியும் இருக்கும். உறவினர்கள், நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். பெண்களுக்கு சந்தோஷமான மன நிலை இருக்கும். அரசியல்வாதிகளின் பெயரும், புகழும் வளரும்.

கலைத்துறையினருக்கு உங்களின் ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். மாணவர்களுக்கு போட்டி, பந்தயங்களில் துணிச்சலுடன் ஈடுபட்டு சாதகமான நிலை காண்பீர்கள். ஊக்கத்துடன் படிப்பது நல்லது.

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி

அனுகூலமான திசைகள்: வடக்கு, கிழக்கு

அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

பரிகாரம்: துர்க்கை அம்மனை செவ்வாய் கிழமை அன்று எலுமிச்சை தீபம் ஏற்றி வணங்க எதிர்ப்புகள் விலகும். காரிய தடைகள் நீங்கும்.

5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

தனது உழைப்பால் வாழ்வில வெற்றிக் கனியை ருசிக்கும் ஐந்தாம் எண் அன்பர்களே இந்த வாரம் நீங்கள் முயற்சி செய்யும் காரியங்கள் வெற்றியை தரும்.

பணவரத்து வழக்கத்தை விட அதிகரிக்கும். இக்கட்டான நேரத்தில் மற்றவர்களது உதவி கிடைக்கும். சாதூர்யமாக பேசி எதிலும் வெற்றி காண்பீர்கள். அனுபவப் பூர்வமான அறிவுத் திறன் அதிகரிக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும்.

தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். பேச்சாற்றலால் வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுப்பீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் செயல்திறன் அதிகரிக்கும். பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் வந்து சேரும்.

குடும்பத்தில் மனம் மகிழும்படியான நிகழ்ச்சி நடக்கும். வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் அதிகரிக்கும். பெண்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும்.

அரசியல்வாதிகள் அனைவரையும் அரவணைத்துச் செல்வீர்கள். கட்சி மேலிடத்தின் கனிவான பார்வை உங்கள் மீது விழும். கலைத்துறையினருக்கு அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். மாணவர்களுக்கு கல்விக்கான செலவு கூடும். சகமாணவர்களிடம் அனுசரித்து செல்வதன் மூலம் சாதகமான பலன் கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன், வெள்ளி

திசைகள்: தெற்கு, தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

பரிகாரம்: புதன்கிழமையில் விஷ்ணு சகஸ்ர நாமம் படித்து பெருமாளை வழிபட காரிய வெற்றி உண்டாகும்.

6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

எந்த ஒரு சூழ்நிலையிலும் அனைவரையும் சரி சமமாக நடத்தும் ஆறாம் எண் அன்பர்களே இந்த வாரம் கோபம் குறைந்து நிதானம் அதிகரிக்கும்.

எடுத்த முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். பகைகளில் வெற்றி உண்டாகும். எதிர்ப்புகள் அகலும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். பயணங்கள் சாதகமான பலன் தரலாம். அடிக்கடி வெளியூர் பயணங்கள் ஏற்படலாம்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வசூலாக வேண்டிய கடன் பாக்கிகள் வசூலாகும்.

வியாபாரத்தில் மன நிறைவு காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலைச்சலுக்கு பிறகு கடினமான காரியம் கூட கைகூடும்.

குடும்பத்தில் வாழ்க்கை துணையின் செயல்கள் உங்களுக்கு அதிருப்தி ஏற்படும் விதத்தில் இருக்கலாம். அனுசரித்து செல்வது நல்லது. பெண்களுக்கு கோபத்தை குறைத்துக் கொள்வது நன்மை தரும்.

அரசியல்வாதிகளின் பதவிகளுக்கு நெருங்கிய நண்பர்கள் மூலமாகவே சில இடையூறுகள் ஏற்படலாம்.

கலைத்துறையினர் சீரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். மாணவர்களுக்கு சக மாணவர்களிடமும் நண்பர்களிடமும் கோபப்படாமல் சாதுரியமாக பேசுவது நன்மை தரும். கல்வியில் வெற்றி பெற கூடுதல் நேரம் ஒதுக்கி படிப்பது நல்லது.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன், வெள்ளி

அனுகூலமான திசைகள்: மேற்கு, வடக்கு

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 6

பரிகாரம்: மஹாலக்ஷ்மியை வெள்ளிக்கிழமை அன்று பூஜித்து வர பொருள் வரத்து கூடும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும்.

7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

சுயநலமில்லாத வாழ்க்கையை தாரக மந்திரமாக கொண்ட ஏழாம் எண் அன்பர்களே இந்த வாரம் செலவுகள் குறையும்.

பணவரத்து அதிகரிக்கும். எதையும் எதிர்த்து நிற்பதை தவிர்த்து அனுசரித்து செல்வது முன்னேற்றத்திற்கு உதவும்.

அடுத்தவர்களின் நலனுக்காக உழைக்க வேண்டி இருக்கும். சொத்துக்களை வாங்கும்போதும் விற்கும்போதும் கவனமாக இருப்பது நல்லது.

இடமாற்றம் உண்டாகலாம். ஆடை, ஆபரணம் சேரும். தொழிலை விரிவுபடுத்துவதற்கான வேகம் கூடும். பங்குதாரர்களிடம் இருந்து வந்த பிரச்சனைகள் அகலும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டி இருக்கும்.

பதவி உயர்வு கிடைக்கலாம். குடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபப்படாமல் நிதானமாக பேசி அனுசரித்து செல்வது நல்லது.

பெண்களுக்கு ஆடை, ஆபரணங்கள் வாங்கும் எண்ணம் அதிகரிக்கும். அரசியல்வாதிகள், கட்சியின் மேலிடத்தில், கணிசமான ஆதரவைப் பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு அனைத்து வேலைகளும் சுமுகமாக முடியும். மாணவர்களுக்கு கல்விக்கு தேவையான உபகரணங்கள், புத்தகங்கள் வாங்குவீர்கள். கூடுதலாக நேரம் ஒதுக்கி பாடங்களை படிக்க வேண்டி இருக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வியாழன்

அனுகூலமான திசைகள்: கிழக்கு, தென்மேற்கு

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3

பரிகாரம்: அம்மனுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட துன்பங்கள் விலகும். மனதில் தன்னம்பிக்கை உண்டாகும்.

8, 17, 26  ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

எடுத்த காரியத்தை முடித்த பின் அடுத்த காரியத்தை பார்க்கும் எட்டாம் எண் அன்பர்களே மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள்.

சாமர்த்தியமாக செயல்பட்டு காரிய வெற்றி காண்பீர்கள். புதிய விஷயங்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும்.

தொழில் வியாபாரம் சிறப்பாக நடக்கும். தொழிலை விரிவுபடுத்த ஆலோசனைகளை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல் திறமை வெளிப்படும். மேல் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கப் பெறுவீர்கள்.

குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களால் அதிகப்படி வருமானம் இருக்கும். பெண்களுக்கு எந்த விஷயத்திலும் தெளிவான முடிவை எடுப்பீர்கள்.

அரசியல்வாதிகளின் பணியாற்றும் திறன் அதிகரிக்கும். கலைத்துறையினர் எதிர்பார்த்த வாய்ப்புகளைப் பெறுவீர்கள்.

உங்கள் பெயரும், புகழும் உயரும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் இருக்கும். அறிவியல், கணித பாடங்களில் கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்ல மதிப்பெண் பெற உதவும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன்

அனுகூலமான திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு, மேற்கு

அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

பரிகாரம்: திங்கள்கிழமைகளில் விநாயகருக்கு நெய்தீபம் ஏற்றி வர கடன் தொல்லை குறையும்.  காரிய தடை நீங்கும்.

9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

வாழ்க்கையை குறிக்கோளுடன் நடத்தி வெற்றி காணும் ஒன்பதாம் எண் அன்பர்களே இந்த வாரம் மனதிடம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட வாய்ப்புகள் கை கூடி வரும்.  பணவரவு நன்றாக இருக்கும். அடுத்தவர்களுக்காக உதவி செய்வது மற்றும் அவர்களுக்காக பரிந்து பேசுவது போன்றவற்றை செய்யும் போது கவனம் தேவை. இல்லையெனில் வீணான அவச்சொல் வாங்க நேரிடும்.

தொழில் வியாபாரம் ஏற்றம் தரும் வகையில் இருக்கும். வியாபாரம் தொடர்பான சிறு பிரச்சனைகள் தோன்றி மறையும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களிடம் கவனமாக பேசி பழகுவது நல்லது. வேலை தொடர்பான வீண் அலைச்சல் உண்டாகலாம். குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உறவினர்கள் நண்பர்களிடம் இருந்து வந்த பூசல்கள் அகலும்.

பெண்களுக்கு வரவும் செலவும் சரியாக இருக்கும். கலைத்துறையினருக்கு நன்மைகள் நடக்கும். அரசியல் துறையினருக்கு எதிர்காலம் தொடர்பாக அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்த்து தீர ஆலோசித்து எதிலும் ஈடுபடவும்,மாணவர்களுக்கு கல்வியை அதிகம் கவலைப்படாமல் பாடங்களை  நன்கு படிப்பது நல்லது.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் – வெள்ளி

அனுகூலமான திசைகள்: கிழக்கு, வடக்கு

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

பரிகாரம்:  முருகனுக்கு அர்ச்சனை செய்து வணங்க எல்லா கஷ்டங்களும் நீங்கி மன அமைதி உண்டாகும்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.