தீவிரவாதி ஹபீஸ் சயீத் வீட்டுக் காவலில் இருந்து விடுதலை : அமெரிக்கா அதிருப்தி!!!

0
190

பாகிஸ்தானை சேர்ந்த 10 தீவிரவாதிகள் கடந்த 26-11-2008 அன்று கடல் மார்க்கமாக இந்தியாவுக்குள் நுழைந்து மும்பையில் குண்டுகளை வெடித்தும் துப்பாக்கியால் சுட்டும் கொடூர தாக்குதல்கள் நடத்தினர்.

150க்கும் மேற்பட்டோர் கொன்று குவிக்கப்பட்ட இந்த தாக்குதல்களை பாகிஸ்தானில் அமர்ந்து கொண்டு மூளையாக இருந்து செயல்படுத்தியவர் ஹபீஸ் சயீத்.

லஷ்கர் தொய்பா என்ற தீவிரவாத இயக்கத்தின் நிறுவனரான இவர் அந்த இயக்கத்துக்கு பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்ட நிலையில் தற்போது ஜமாத் உத்தவா என்ற பெயரில் அரசியல் இயக்கத்தை நடத்தி வருகிறார்.

ஹபீஸ் சயீத்தும் அவரது நண்பர்கள் 4 பேரும் பாகிஸ்தான் அரசால் கடந்த ஜனவரி மாத இறுதியில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.

அவரும் அவரது இயக்கத்தினர் 37 பேரும் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டோரின் பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.

இதனையடுத்து ஹபீஸ் சயீத்தின் பெயர் தீவிரவாத தடுப்பு சட்ட பட்டியலின் 4 ஆவது அட்டவணையில் சேர்க்கப்பட்டது.

இதற்கு எதிராக லாகூர் உயர்நீதி மன்றத்தில் ஹபீஸ் சயீத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு கடந்த மாதம் 14ஆம் திகதி விசாரணைக்கு வந்த போது ஹபீஸ் சயீதுக்கான வீட்டுக்காவலை நீடிக்க விரும்பவில்லை எனவும் அந்த உத்தரவை திரும்ப பெறுவதாகவும் நீதிமன்றத்தில் பாகிஸ்தான் அரசு தெரிவித்தது.

இன்னும் மூன்று தினங்களில் அவரது வீட்டுக்காவல் முடிவடையும் நிலையில் நேற்று நடந்த இந்த வழக்கின் விசாரணையில் வீட்டுக்காவலை மேலும் மூன்று மாதங்கள் நீடிக்க வேண்டும் என அரசுத்தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

ஆனால் அந்த கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள் ஹபீஸ் சயீத் மீதான வீட்டுக்காவலை நீடிக்க மறுத்து விட்டது.

ஹபீஸ் சயீதை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில் ஹபீஸ் சயீத் விடுதலை செய்யப்பட்டதற்கு அமெரிக்க வெளியுறவு செய்தி தொடர்பாளர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.