“இந்திய தேர்தல் ஆணையம் அளித்த தீர்ப்பை எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு அர்ப்பணிக்கிறோம்: ஓ. பன்னீர் செல்வம்” – (வீடியோ)

0
701

இரட்டை இலை சின்னம் முதல்வர் எடப்பாடி அணிக்கு ஒதுக்கப்பட்டது. இதையடுத்து அதிமுக தலைமை அலுவலகத்துக்கு முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் வருகை தந்தனர்.

ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடியப் பின்னர் இருவரும் கூட்டாக பேட்டியளித்தனர்.

அப்போது பேசிய துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், ஜெயலலிதாவுக்கு பிறகு நாம்தாம் அதிமுக என்பது நிரூபணமாகியுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையம் அளித்த தீர்ப்பை எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு அர்ப்பணிக்கிறோம். ஜெயலலிதா நியமித்த கட்சி நிர்வாகிகளே தொடர்ந்து பொறுப்பு வகிப்பார்கள்.

கட்சிக்கு ஏற்பட்ட சோதனைகளுக்கு தேர்தல் ஆணைய தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது; ஜெயலலிதா நியமித்த நிர்வாகிகள் ஒன்றிணைந்து அதிமுகவை வழி நடத்திச் செல்வோம் என்று கூறினார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.