முருகனின் மயில் வாகனம் உணர்த்தும் தத்துவம்

0
670

அழகுக்கு மட்டுமின்றி வாழ்வியல் தத்துவங்களையும் கடவுளின் வாகனமாக இருந்து நமக்கு உணர்த்தும் மயிலின் சிறப்புகள் பல உள்ளன.

முருகப்பெருமானின் வாகனம் மயில் என்பது அனைவரும் அறிந்ததே.

அதன் சிறப்புகள் என்ன தெரியுமா? மயில் அழகில் சிறந்தது மட்டுமல்ல, அமைதியிலும் சாதுவான பறவை.

அரக்க குணங்கள் கொண்ட பதுமசூரனின் உடலில் ஒரு பாதியை மயிலாகவும், மற்றொன்றை சேவல் கொடியாகவும் மாற்றினார் முருகப் பெருமான்.

அதில் மயிலை தன்னுடைய வாகனமாக வைத்துக் கொண்டார். அதற்கு உண்மையான தத்துவம், மனிதர்களிடம் இருக்கும் அசுர குணம் இறைவனை சரணடையும் போது சாதுவாக மாறிப்போகும் என்பதாகும்.

மயில் தன்னுடைய தோகையை விரித்து ஆடினால் மழை பொழிந்து உலகம் செழிக்கும் என்பார்கள்.

மழை வரப்போவதை முன்கூட்டியே அறியும் திறன் கொண்டது மயில். உலகம் செழிப்பதை சொல்லும் மயில், தோகை விரிக்கும்போது அனைத்தும் இறைவனே என்பதை விளக்கும் ‘ஓம்’ வடிவம் தோன்றும்.

மயிலிறகால் தீப்புண்களுக்கு மருந்திடுவதைப் பார்த்திருக்கலாம்.

அவ்வாறு செய்வதன் மூலம் தீயால் ஏற்பட்ட காயங்கள் விரைவில் குணமடையும். தீய சக்திகளை விரட்டவும் மயில் தோகைகள் உதவுகிறது.

மயிலின் குரல் உயிர்கள் அனைத்திற்கும் ஏதேனும் ஒரு குறை உண்டு என்பதை நமக்கு புரியவைக்கும்.

இப்படி அழகுக்கு மட்டுமின்றி வாழ்வியல் தத்துவங்களையும் கடவுளின் வாகனமாக இருந்து நமக்கு உணர்த்தும் மயிலின் சிறப்புகள் பல.

ஓம் நமோ நாராயணாய நம என்று சொல்வது ஏன்?

201710171532106817_why-saying-om-namo-narayanaya_SECVPF.gifநாராயணாய நமக என்ற எட்டெழுத்து மந்திரத்தை தவறாமல் சொல்ல வேண்டும். இந்த மந்திரத்தை எந்த அளவுக்கு உளப்பூர்வமாக உச்சரிக்கிறோமோ அந்த அளவுக்கு மனம் பக்குவப்படும்.

புரட்டாசி சனியன்று நாராயணாய நமக என்ற எட்டெழுத்து மந்திரத்தை தவறாமல் சொல்ல வேண்டும். இந்த மந்திரத்தை எந்த அளவுக்கு உளப்பூர்வமாக உச்சரிக்கிறோமோ அந்த அளவுக்கு மனம் பக்குவப்படும்.

இதிலுள்ள நம என்ற சொல்லுக்கு உனக்கே நான் உரியவன் என்பது அர்த்தம். ஓம் காரமாக விளங்கும் நாராயணனே உனக்கே நான் உரியவன் என்பது மந்திரத்தின் முழுப்பொருள்.

அதாவதுஉலகத்தில் வந்து விட்ட பிறகு, என்றோ ஒருநாள் செல்லப்போகிறோம். அவ்வாறு செல்லும் நாளில் நாராயணா!

உன்னால் வந்த நாங்கள் உன் இடத்திற்கே திரும்பி வந்து விடுகிறோம் என்று சரணாகதி அடைவதாக அர்த்தம். கலியுகக் கொடுமைகளில் இருந்து தப்பித்து, பூலோகத்தில் சுகமாகவும், நிம்மதியாகவும் வாழ ஓம் நமோ நாராயணாய என்று சொல்வது பொருத்தமானது.

கடவுளை விட அவருடைய திருநாமத்திற்கு அரிய சக்தி உண்டு. திரவுபதியின் துன்பத்தைப் போக்கியது கோவிந்தா என்னும் நாமம்.

முதலையிடம் சிக்கிய கஜேந்திர யானையின் துன்பம் தீர்த்தது ஆதிமூலம் என்ற திருநாமம். கலியுகத்தில், இவ்வாறான நாமஜெபம் மூலமாக கடவுளின் திருவடியை எளிதாக அடைய முடியும்.

கட்டித்தங்கம் போல கடவுள், ஆபரணத்தங்கம் போல அவரின் திருநாமம் என்று இதனைச் சொல்வதுண்டு. ஆபரணத் தங்கமான கடவுளின் திருநாமத்தை நேரம் கிடைக்கும்போதெல்லாம் சொல்லி, யாரும் எளிதாகச் சேமிக்கலாம்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.