ரெயில் அடியில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய மனிதர் – வைரலாகும் வீடியோ..!!

0
315

 

உத்தரப்பிரதேசம் மாநிலம் திவோரியா மாவட்டத்தில் உள்ள பன்கட்டா ரெயில் நிலையத்தில் ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார்.

பாலத்தின் வழியாக செல்லாமல் அங்கு நின்று கொண்டிருந்த சரக்கு ரெயிலுக்கு அடியில் நுழைந்து சென்றுள்ளார்.

செல்லும் போது திடீரென ரெயில் நகர ஆரம்பித்தது. இதனை கவனித்த அவர் தண்டவாளத்தில் படுத்துக் கொண்டார்.

ரெயில் கடந்து சென்ற பிறகு அவர் எழுந்து நடந்து வந்தது அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

அவர் உடலில் சிறிய காயம் கூட ஏற்படவில்லை. இதனை அருகில் இருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். அது வைரலாக பரவி வருகிறது.

அவர் குடிபோதையில் இருந்ததால் தான் தண்டவாளத்தை கடந்தார் என நேரில் பார்த்தவர்கள் கூறினர். ரெயில் தண்டவாளத்தில் சிக்கி உயிருடன் வந்தது அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.