“வித்தியாசமான முறையில் வாழ்க்கைத் துணையைத் தேடும் ஆர்யா! தொலைப்பேசி எண் வழங்கி கோரிக்கை!

0
351

தான் திருமணத்துக்காகப் பெண் தேடுவதாகவும் தன்னை விரும்புபவர்கள் குறிப்பிட்ட தொலைப்பேசி எண்ணை அழைக்கவேண்டும் என்றும் நடிகர் ஆர்யா கோரிக்கை விடுத்துள்ளார்.

நடிகர் ஆர்யா, சமூகவலைத்தளங்களில் காணொளிப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

கடந்த வாரம் உடற்பயிற்சி நிலையத்தில் நான் திருமணம் செய்வது குறித்து பேசிய வீடியோ வெளியானது.

அது எனக்குத் தெரியாமல் என் நண்பர்கள் விளையாட்டுத்தனமாகச் செய்தது. ஆனால் அதில் நான் பேசியது எல்லாமே உண்மைதான்.

நான் திருமணத்துக்காகப் பெண் தேடிக்கொண்டிருக்கிறேன். பொதுவாகப் பெண் தேடும்போது, அவர்களுடைய பணியிடம் அல்லது நண்பர்கள், உறவினர்கள் மூலமாகப் பெண் தேடுவார்கள்.

இல்லையென்றால் திருமணத் தளங்கள் வழியாக. ஆனால் நான் அப்படியல்ல.

இது தொடர்பான பெரிய தேவைகளோ, கட்டுப்பாடுகளோ என்னிடம் கிடையாது. உங்களுக்கு என்னைப் பிடித்திருந்தால், நான் உங்களுக்கு ஒரு நல்ல துணைவனாக இருப்பேன் என நினைத்தால் 73301 73301 என்கிற தொலைப்பேசி எண்ணுக்கு அழையுங்கள்.

இது விளையாட்டோ, நகைச்சுவையோ கிடையாது. இது என் வாழ்க்கை விஷயம். இந்த எண்ணுக்கு அழையுங்கள். நான் காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

குறிப்பிட்ட தொலைப்பேசி எண்ணை அழைத்தால் http://www.mapillaiarya.com/ என்கிற இணையத்தளத்தைக் குறிப்பிடுகிறது. இது விளையாட்டா அல்லது நிஜமாகவே ஆர்யா பெண் தேடுகிறாரா என்கிற குழப்பம் சமூகவலைத்தளங்களில் நீடிக்கிறது!

 

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.