4 மாதங்களில் 40 மாணவர்களிடம்அதிக மதிப்பெண் தருவதாக கூறி ஆசிரியை செய்த ஷேஷ்ட்டை அம்பலம்

0
369

பரீட்சையில் அதிக புள்ளிகளைப் பெறுவதற்காக தன்னுடன் பாலியல் உறவில் ஈடுபடுமாறு மாணவர்களை நிர்ப்பந்தித்த ஆசிரியை கைது!

பரீட்­சையில் அதிக புள்­ளி­களைப் பெற வேண்­டு­மானால் தன்­னுடன் பாலியல் உறவில் ஈடு­பட வேண்­டு­மென பாட­சாலை மாண­வர்­களை நிர்ப்­பந்­தித்த ஆசி­ரியை ஒருவர் கொலம்­பியா அதி­கா­ரி­களால் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

40 வய­தான யோகஸ்ட்டா எனும் இப்பெண், கொலம்­பியா நாட்டின் தலை­நகர் மெட­லி­னி­லுள்ள பாட­சா­லை­யொன்றில் ஆசி­ரி­யை­யாக பணி­யாற்­றி­யவர்.

அப்­பா­ட­சா­லையில் தன்­னிடம் கல்வி கற்ற 16, 17 வய­தான மாண­வர்கள் பரீட்­சையில் அதிக புள்­ளி­களைப் பெற வேண்­டு­மானால் தன்­னுடன் பாலியல் உறவில் ஈடு­பட வேண்­டு­மென கோஸ்ட்டா நிர்ப்­பந்­தி­த்தார் என குற்றம் சுமத்­தப்­பட்­டுள்ளார்.

இவர், தனது மாண­வர்­க­ளான 40 பேரின் கல்­விக்கு உத­வு­வ­தாகக் கூறி, அம்­மா­ண­வர்­களின் தொலை­பேசி இலக்­கங்­களை பெற்­றுக்­கொண்டார்.

ஆனால், பின்னர் அம்­மா­ண­வர்­க­ளுக்கு வாட்ஸ் அப் மூலம் தனது ஆபா­சப்­ப­டங்­களை அனுப்ப ஆரம்­பித்தார் என குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது.

அம்­மா­ண­வர்­களில் சிலரை தனது வீட்­டுக்கு அழைத்த யோகஸ்ட்டா, தன்­னு­டன் பாலியல் உறவில் ஈடு­பட வேண்­டு­மெ­னவும் இல்­லா­விட்டால் அவர்கள் பாட­சாலை பரீட்­சையில் சித்­தி­ய­டைய மாட்­டார்கள் எனவும் கூறி­னாராம்.

கடந்த வருடம் ஜன­வரி மற்றும் ஏப்ரல் மாதத்­துக்­கி­டையில் இச்­சம்­ப­­வங்கள் இடம்­பெற்­ற­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மேற்­படி மாண­வர்­களில் ஒரு­வரின் தொலை­பே­சி­யி­லி­ருந்த ஆபா­சப் ப­டங்­களை அம்­மா­ண­வனின் தந்தை பார்த்ததால் இவ்­வி­ட­யங்கள் அம்­ப­ல­மா­கின. அதை­ய­டுத்து யோகஸ்ட்­டாவை பொலிஸார் கைது செய்து வழக்குப் பதிவு செய்­தனர்.

அதன்பின் யோகஸ்ட்­டாவின் கணவர் விவாக­ரத்­துக்கு விண்­ணப்­பித்­துள்ளார். மாண­வர்­களை அச்சுறுத்தி பாலியல் உறவில் ஈடுபட்டமை தொடர்பான வழக்கில் அவர் குற்றவாளியாக காணப்பட்டால் 40 வருடங்கள் வரையான சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.