முதல் டெஸ்ட்: இந்தியாவுக்கு வெற்றிவாய்ப்பு பறிபோனது!

0
137

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இலங்கை அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகள் பறிகொடுத்து திணறிக்கொண்டிருந்தது.

இன்னும் 3 விக்கெட்டுகள் எடுத்தால் வெற்றி என்ற நிலை இந்தியாவுக்கு இருந்தது. ஆனால், ஆட்ட நேர முடிவால், போட்டி டிராவானது.

இந்தப் போட்டிக்கான டாஸை வென்ற இலங்கை அணி, இந்தியாவை பேட்டிங் செய்யச் சொல்லி பணித்தது.

201711201804514248_1_6karunaratne-s._L_styvpfஇதையடுத்து களமிறங்கிய இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 172 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. புஜாரா அதிகபட்சமாக 52 ரன்கள் எடுத்தார்.

இலங்கையின் லக்மால், அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து, களமிறங்கிய இலங்கை, 294 ரன்கள் குவித்தது. பின்னர், இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா, 352 ரன்கள் எடுத்து இலங்கைக், இலக்காக 231 ரன்கள் நிர்ணயித்தது.

201711201804514248_2_6bhuvaneshwar-s._L_styvpfகடைசி நாளான இன்று களமிறங்கிய இலங்கை, ஒரு கட்டத்தில் 75 ரன்கள் மட்டுமே எடுத்து 7 விக்கெட்டுகளை இழந்து திணறியது. ஆனால், ஆட்ட நேரம் முடிந்ததால், போட்டி டிராவில் முடிந்தது.

இரண்டு இன்னிங்ஸிலும் புவ்னேஷ்வர் குமார், தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்பட்டது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.