நயன்தாரா பிறந்தநாள்: வாழ்த்து மடலில் சிலபல வரிகளை எடுத்து விட்ட விக்னேஷ் சிவன்

0
226

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை நயன்தாராவின் பிறந்தநாளுக்கு, இயக்குநரும், நயன்தாரா காதலருமான விக்னேஷ் சிவன் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நயன்தாரா இன்று தனது 34-வது பிறந்த நாளை கொண்டாடினார்.

நயன்தாரா நீண்ட நாட்களாக காதலித்து வருகிறார். ஒரு வீட்டில் சேர்ந்து வாழ்வதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தனது பிறந்தநாளை காதலர் விக்னேஷ் சிவனுடன் கொண்டாடி மகிழ்ந்தார்.

இதையொட்டி இருவரும் முகத்தோடு முகம் சேர்த்து சிரித்துக் கொண்டிருக்கும் புகைப்படத்தை நயன்தாரா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் பிறந்தநாள் கொண்டாட்டம் என்று குறிப்பிட்டுள்ளார்.

விக்னேஷ் சிவனும் அவரது டுவிட்டர் பக்கத்தில் நயன்தாராவுடன் நெருக்கமாக இருக்கும் அதே படத்தை வெளியிட்டுள்ளார். அவரை காதல் ரசம் சொட்டும் விதத்தில் வாழ்த்து மழை பொழிந்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

நான் உண்மையாகவே சிறந்த பெண்ணாக காணும் உனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். உனது உறுதித்தன்மையும், அழகும் நிலையானது.

பொருத்தமான எவ்வளவு சிறந்த கதைகளை தேர்ந்து எடுத்து நடிக்கிறாய். எப்போதும் உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன். என் தங்கமே உனக்கு எனது அளவு கடந்த அன்பும் மரியாதையும்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

201711181407483615_1_Nayanthara-Birthday3._L_styvpfசமீபத்தில் விக்னேஷ் சிவன் பிறந்த நாளை அவருடன் அமெரிக்கா சென்று கோலாகலமாக கொண்டாடினார். இருவரும் அந்த புகைப்படங்களை தங்கள் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு வாழ்த்துக்களை பறிமாறிக் கொண்டனர்.

முன்னதாக இத்தாலி சென்று போப் ஆண்டவரிடம் வாழ்த்து பெற்றனர். இப்போது நயன்தாரா பிறந்தநாளுக்கு விக்னேஷ் வாழ்த்து தெரிவித்து இருப்பது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.