நாமல் எவ்வாறு சட்டத்தரணியானார்? உண்மைகள் அம்பலம்….

0
544

 

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ எவ்வாறு சட்டத்தரணியானார் என சர்வதேச வர்த்தக ராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.

வரவு செலவுத்திட்டம் தொடர்பில் நேற்றைய தினம் பாராளுமன்றில் நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

625.500.560.350.160.300.053.800.900.160.90 (1)நமால் ராஜபக்ஸ நேர்மையான முறையில் சட்டக்கல்லூரி பரீட்சையில் சித்தியடையவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

குளிரூட்டப்பட்ட அறை ஒன்றில் இருந்து நாமல் ராஜபக்ஸ சொகுசாக பரீட்சைக்குத் தோற்றியதாகவும் பரீட்சையில் பல்வேறு மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சட்டத்தரணி என்ற போதிலும் எந்தவொரு சட்டமும் நாமல் ராஜபக்சவிற்கு தெரியாது என அவர் சுட்டிக்காட்டிக்காட்டியுள்ளார்.

சிவில் வழக்கு சரத்துக்களில் ஏதேனும் இரண்டு சரத்துக்களை முடிந்தால் நாமல் ராஜபக்ஸ தற்போது பாராளுமன்றில் கூறட்டும் என அவர் சவால் விடுத்துள்ளார். கிறிஸ் நிறுவனத்தின் ஊடாக 400 மில்லியன் ரூபா கொள்ளையிட்டதாகவும் நாமல் மீது குற்றம் சுமத்தியுள்ளார்.

சித்தப்பமார், மாமார், தந்தை மற்றும் சகோதரர்களுடன் இணைந்து பாரியளவில் பணத்தை கொள்ளையிட்டுள்ளதாகக் குற்றம் சுமத்மதியுள்ளார்.

இவ்வாறு வெட்கம் கெட்ட பிழைப்பு நடாத்துவதற்கு பதிலாக, தோளில் போட்டிருக்கும் சிகப்பு துண்டைக் கொண்டு தூக்கிட்டு சாவது மேல் என சுஜீவ சேனசிங்க கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

ஒன்றாக விளையாடிய வசீம் தாஜூடீனையும் கொலை செய்தாகத் தெரிவித்துள்ளார். இதேவேளை, பேர்பச்சுவல் ட்ரஸரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸூடன் சுஜீவ சேனசிங்க தொடர்பு பேணியதாகவும் இருவரும் 44 தடவைகள் தொலைபேசியில் உரையாடியுள்ளதாகவும் நாமல் ராஜபக்ஸ குற்றம் சுமத்தியுள்ளார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.