நாச்சியார் பட முன்னோட்டத்தில் பெண்களை இழிவுபடுத்தி விளம்பரம் தேட முயற்சிக்கிறாரா இயக்குநர் பாலா?

0
373

இயக்குநர் பாலாவின் `நாச்சியார்’ திரைப்படத்தின் முன்னோட்ட காட்சி ஒன்று முதல்முறையாக பரபரப்பாக பேசப்படுகிறது.

52 நொடிகள் ஓடும் முன்னோட்ட காட்சியில் நாயகி ஜோதிகா பெண்களை இழிவுபடுத்தும் வார்த்தை ஒன்றை கூற, பல்வேறு விவாதங்களுக்கு உள்ளாகியிருக்கிறது நாச்சியார்.

காவல்துறை அதிகாரி நாச்சியார்

இளையராஜா இசையில் ஜி.வி பிரகாஷ், ஜோதிகா நடித்திருக்கும் திரைப்படம் நாச்சியார். இயக்குநர் பாலாவுக்கு நாச்சியார் 8வது திரைப்படம். இதில், நாச்சியார் என்ற காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கிறார் ஜோதிகா.

அவர் நடித்த முந்தைய திரைப்படமான மகளிர் மட்டும் பெண்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் தற்போது நாச்சியர் திரைப்படத்தின் முன்னோட்டமே பெண்களை இழிவுடுத்தும் வகையில் உள்ளதாக விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது

படத்தின் முன்னோட்ட காட்சி கடந்த 15ஆம் தேதி யு டியூபில் வெளியிடப்பட்டிருந்த நிலையில், இதுவரை 28 லட்சம் பேர் அதனை பார்த்துள்ளனர்.

இதுவரை பாலா இயக்கிய திரைப்படங்களிலேயே அதிக கவனத்தை ஈர்த்த முன்னோட்டம் நாச்சியார் என்றே கூறலாம்.

இந்த முன்னோட்ட காட்சி சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டதற்கும், விவாத பொருளாக மாறியதற்கும் முக்கிய காரணம் ஜோதிகா பேசிய அந்த ஒற்றை வார்த்தை. ஒரு காட்சியில் காக்கி சட்டையில் வரும் ஜோதிகா எதிரே இருப்பவரை அறைந்துவிட்டு ‘****** பயலுக’ என்று கூறியிருப்பார்.

வேண்டுமென்றே செய்தாரா பாலா?

இயக்குநர் பாலாவின் திரைப்படங்கள் எதார்த்த மனிதர்களையும், விளம்புநிலை மக்களின் வாழ்வியலையும் அழகாக பதிவு செய்யக்கூடியவை.

1999களில் வெளியான சேது என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் வலுவாக காலூன்றினார் பாலா. சேது படம் அவருக்கு தேசிய விருதை பெற்றுத்தந்தது.

_98790855_8f71ff87-99f4-4a10-bd4a-7b2cfd64d6e5 சேது திரைப்படத்திற்காக தேசிய விருதை பெற்றார் இயக்குநர் பாலா

அவ்வாறு இருக்கையில் நாச்சியார் முன்னோட்ட காட்சியில் பெண்களை குறிப்பிடும் ஒரு கொச்சை சொல்லை பயன்படுத்தியது பாலா மீதான வழக்கமான விமர்சனங்களை மேலும் சூடாக்கியுள்ளது. விளம்பர யுக்திக்காக அவர் இப்படி செய்திருக்கலாம் என்ற குற்றஞ்சாட்டுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.

”ஜோதிகாவை இப்படி பேச வைத்து விளம்பரம் தேடுவதா? ”

நாச்சியார் பட முன்னோட்ட சர்ச்சை குறித்து மாதர் சங்க நிர்வாகி உ.வாசுகியிடம் கேட்டபோது, “ஒரு விஷயத்தில் நாம் ஆட்சேபணை தெரிவிப்பதற்குமுன், முழு திரைப்படத்தை பார்த்தபின்புதான் அந்த காட்சி அமைப்பு எந்த பின்புலத்தில் சொல்லப்பட்டுள்ளது என்பதை கூற முடியும்.

ஆனால் நாச்சியார் விஷயத்தில் அவ்வாறு முழுப்படம் பார்க்க வேண்டும் என்ற அவசியமில்லை” என்றார்.

எதார்த்தம் என்ற பெயரில் பெண்களை இழிவுப்படுத்தும் எந்தவொரு சொல்லையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறிய அவர், ஓர் ஆண் ஒழுக்கம் தவறும்போது இதுபோன்ற எந்தவொரு இழி சொல்லும் பயன்படுத்தப்படுவது இல்லையென்றும், இந்த சமூகமே பெண்களை வலுக்காட்டாயமாக ஒரு முறைக்குள் தள்ளிவிட்டு தற்போது பெண்களை இழிவுப்படுத்தும் அந்த வார்த்தையை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

_98799369_0e4dc7a5-42b4-4426-ae42-454abca085a4 ஜோதிகாவை இப்படி பேச வைத்து விளம்பரம் தேடுவது சரியான யுக்தியில்லை: உ.வாசுகி

விளம்பர யுக்திக்காக பாலா இந்த சொல்லை இதில் பயன்படுத்தியுள்ளார் என்றும், இதைவிட கொச்சையான சொற்களை கதாநாயகர்கள் வசனமாக பேசியுள்ள போதும் ஜோதிகா என்ற ஒரு பெண், பெண்ணை இழிவுப்படுத்தும் சொல்லை பேசியிருப்பதால் இப்பிரச்சனை சமூக வலைத்தளங்களில் பரப்பரப்பாக பேசப்படுகிறது என்றும் வாசுகி தெரிவித்தார்.

மேலும், இயக்குநர் பாலா அவருடைய படங்களின் மூலமாக ஆர்வத்தை தூண்டலாம் அல்லது காட்சி அமைப்புகள் மூலமாக தூண்டலாம். ஆனால் ஜோதிகாவை இப்படி பேச வைத்து விளம்பரம் தேடுவது சரியான யுக்தியில்லை என்றார்.

_98790851_2f794a2e-c92f-4259-b8ac-eec223542c6dஇறுதியாக, பீப் பாடல் வெளியான போது அதை தீவிரமாக எதிர்த்த மாதர் சங்கம் அடுத்தடுத்த பிரச்சனைகளில் எங்கு சென்றது என்பதை கேலி செய்து சமூக வலைத்தளங்களில் வெளிவரும் மீம்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த வாசுகி,

”தமிழகத்தில் சமீபத்தில் மதுரையில் உள்ள ஒரு கிராமத்தில் பள்ளி மாணவிகளை தொடர்ச்சியாக பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியருக்கு 55 ஆண்டுகள் சிறைத்தண்டனை வாங்கிக் கொடுத்துள்ளோம்.

ஆனால், அதைப்பற்றி பேச இங்கு யாருமில்லை. எங்களுக்கு பல்வேறு கடமைகள் இருக்கின்றன. சினிமா மட்டுமே முக்கியமல்ல.” என்றார்.

_98799367_3016db8d-c357-4bbf-81d5-a3c34d1e27f9”வக்கிர எண்ணம் கொண்டவர்களின் வெளிப்பாடுதான் இது”

முன்னோட்ட காட்சிகள் முறையான தணிக்கைக்கு உள்ளாக்கப்படுகின்றனவா என்பது குறித்து மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின் முன்னாள் உறுப்பினர் எஸ்.வி சேகரிடம் கேட்டபோது, “முன்னோட்ட காட்சிகளை தொலைக்காட்சிகளுக்கு பயன்படுத்தப்படும் பட்சத்தில் அதனை தணிக்கை செய்ய முடியும். இணைய தளம் மற்றும் சமூக ஊடகங்களில் பயன்படுத்தப்படும் முன்னோட்ட காட்சிகளை தணிக்கை செய்ய வாரியத்திற்கு அதிகாரமில்லை” என்று தெரிவித்தார்.

“இனிவரும் காலங்களில் சமூக வலைத்தளங்களில் வெளியாகும் முன்னோட்ட காட்சிகளும் தணிக்கை செய்யப்பட வேண்டும். படைப்பாளிகளுக்கு ஒரு சுய ஒழுக்கம் இருக்க வேண்டும். மனதில் வக்கிர எண்ணம் கொண்டவர்களின் வெளிப்பாடுதான் இது” என்றும் எஸ்.வி சேகர் தெரிவித்தார்.

_98790857_202bcad6-4a6c-4bd7-be66-835d8425d6ceஜோதிகாவின் இத்தனை ஆண்டுகால மரியாதையை ஒரு வசனத்தின் மூலம் அழித்துவிட்டார் இயக்குநர் பாலா என்றார் எஸ்.வி சேகர்.

முன்னோட்ட காட்சிகளை தொலைக்காட்சிகளுக்கு பயன்படுத்தப்படும் பட்சத்தில் அதனை தணிக்கை செய்ய முடியும் என்றும், இணைய தளம் மற்றும் சமூக ஊடகங்களில் பயன்படுத்தப்படும் முன்னோட்ட காட்சிகளை தணிக்கை செய்ய வாரியத்திற்கு அதிகாரமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், இனிவரும் காலங்களில் சமூக வலைத்தளங்களில் வெளியாகும் முன்னோட்ட காட்சிகளையும் மத்திய அரசால் தணிக்கை செய்யப்பட வேண்டும் என்றும், படைப்பாளிகளுக்கு ஒரு சுய ஒழுக்கம் இருக்க வேண்டும் மனதில் வக்கிர எண்ணம் கொண்டவர்களின் வெளிப்பாடுதான் இது என்றும் எஸ்.வி சேகர் தெரிவித்தார்.

ஜோதிகாவின் இத்தனை ஆண்டுகால மரியாதையை ஒரு வசனத்தின் மூலம் அழித்துவிட்டார் இயக்குநர் பாலா என்றார் எஸ்.வி சேகர்.

”ஒரு சாதிப்பெண்கள் மட்டும்தான் கலைச்சேவை செய்ய வேண்டுமா?”

நாகரீக சமுதாயத்தில் எதை காட்ட வேண்டும் என்ற பொறுப்பு படைப்பாளிகளுக்கு உள்ளது என்கிறார் பெண்ணிய செயற்பாட்டாளரான ஓவியா.

பெண்களை இழிவுபடுத்தும் ஒரு கொச்சை சொல் கதாநாயகியின் வழியாக வெளியே வரும்போது அது பன்மடங்கு உயிர்பிக்கப்படுகிறது என்றும், எதார்த்தத்தின் பெயரில் சாதிகளை குறிப்பிட்டு படைப்பாளிகளால் படம் எடுக்க முடியுமா என்றும் அவர் கேள்வியெழுப்புகிறார்.

_98799365_1c1e2c07-a4c7-461e-b3b0-9f14866e2187 எதார்த்தத்தின் பெயரில் சாதிகளை குறிப்பிட்டு படைப்பாளிகளால் படம் எடுக்க முடியுமா: ஓவியா

நாம் ஒழித்தேவிட்டோம் என்று சொல்லக்கூடிய ஒரு சொல்லை படைப்பாளிகள் எதற்காக மீண்டும் இந்த தலைமுறைக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்று கேள்வி எழுப்பும் ஓவியா, இந்த சொல்லாடலை ஒழிக்க தமிழகத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளையும் நினைவுக்கூர்ந்தார்.

”தேவதாசி முறையை ஒழிக்க தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர் மூவலூர் ராமாமிர்தம். 1930களில் சென்னை மாகாணத்தில் தேவதாசி முறையை ஒழிக்கப்பாடுபட்ட மருத்துவர் முத்துலட்சும் ரெட்டிக்கு ஆதரவாக இருந்து தொடர் பிரசாரங்களில் ஈடுப்பட்டார் ராமாமிர்தம்.

முத்துலட்சுமி ரெட்டி சட்டமன்ற உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டபின், சட்டசபையில் நடைபெற்ற விவாதத்தின்போது, ‘தேவதாசி முறை என்பது கலைச்சேவை போன்றது. அச்சேவையில் ஈடுபடும் பெண்கள் சொர்க்கத்துக்கு செல்வார்கள்’ என்றார் சத்தியமூர்த்தி.

அதற்கு பதிலளித்த முத்துலட்சுமி ரெட்டி, ‘கடவுளுக்கு கலைச்சேவையை ஏன் ஒரே சாதிப்பெண்கள் செய்ய வேண்டும். பிற சாதிப்பெண்களும் கலைச்சேவை செய்து சொர்க்கத்துக்கு செல்லலாமே’ என்றார். முத்துலட்சுமி ரெட்டி, மூவலூர் ராமாமிர்தத்தின் கடும் முயற்சியால் 1947ல் தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் நிறைவேறியது.” என்றார் ஓவியா.

இந்த பிரச்சனை குறித்து இயக்குனர் பாலா தரப்பின் விளக்கத்தை அறிய முயற்சித்தோம். ஆனால், இதுபற்றி பாலா, ஊடகங்களிடம் இப்போது எதுவும் கூற மாட்டார் என்று அப்படத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.