டொப் 10 திரைப்படங்களின் ’பாகுபலி 2’ முதலிடம்

0
204

தமிழ்த் திரையுலகத்தில் இதுவரை எந்த ஒரு திரைப்படத் தயாரிப்பாளரும் அவர்களது திரைப்படங்களின் வசூல் எவ்வளவு என்பதைப் பற்றி அறிவித்ததே இல்லை.

இருந்தாலும், திரைப்படத்தை ஓட வைக்கவும் அந்தந்த திரைப்பட நாயகர்களின் திருப்திக்காகவும், சில பல வழிகளில் ஒரு தொகையைப் பரப்புவது வழக்கம்.

அப்படித்தான் பல திரைப்படங்களின் வசூல் நிலவரங்களின் விவரங்கள் வெளிவருகின்றன.

சில சமயங்களில் வினியோகஸ்தர்கள் மூலமாகவும் ஊடகங்கள் வாயிலாகவும், சில திரைப்படங்களின் வசூல் விவரங்கள் வெளியிடப்படுகின்றன.

இருந்தாலும், எதையும் நாம் அதிகாரப்பூர்வமானவை என்று எடுத்துக்கொள்ள முடியாது. தமிழில் இதுவரை அதிக வசூலைப் பெற்றத் திரைப்படம் என ‘எந்திரன்’ திரைப்படத்தின் வசூல் தொகைதான் முதலிடத்தில் உள்ளது. அந்தத் தொகையை ‘மெர்சல்’ திரைப்படம் முறியடிக்குமா என்பது சந்தேகம்தான்.

கடந்த சில நாட்களாகவே, தென்னிந்திய அளவில் அதிக வசூலைப் பெற்றத் திரைப்படங்கள் என்ற ஒரு கணக்கு, சமூக வலைத்தளங்களில் சுற்றிக் கொண்டிருக்கிறது.

அவை உண்மையா என்பதைப் பற்றி சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்கள் தான் சொல்ல வேண்டும். இருந்தாலும், அந்த 10 திரைப்படங்கள் எவை, அவற்றின் தோராயமான வசூல் (இந்திய ரூபாய்களில்) எவ்வளவு என்பது பின்வருமாறு,

image_fd675b17c51. பாகுபலி 2: தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் – 17 பில்லியன்

2. பாகுபலி: தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் – 6 பில்லியன்

3. எந்திரன்: தமிழ், தெலுங்கு, ஹிந்தி – 2.89 பில்லியன்

4. கபாலி – தமிழ், தெலுங்கு, ஹிந்தி – 2.86 பில்லியன்

5. மெர்சல் – தமிழ், தெலுங்கு – 2.4 பில்லியன் (இன்னமும் திரையில்)

6. ஐ – தமிழ், தெலுங்கு, ஹிந்தி – 2.39 பில்லியன்

7. கைதி நம்பர் 150 – தெலுங்கு 1.64 பில்லியன்

8. சிவாஜி – தமிழ், தெலுங்கு, ஹிந்தி – 1.55 பில்லியன்

9. லிங்கா – தமிழ், தெலுங்கு, ஹிந்தி – 1.54 பில்லியன்

10. மகதீரா – தமிழ், தெலுங்கு, மலையாளம் – 1.5 பில்லியன்

இந்தப் பத்துத் திரைப்படங்களில் ‘எந்திரன், கபாலி, மெர்சல், ஐ, சிவாஜி, லிங்கா’ ஆகிய 6 திரைப்படங்களும் இடம்பெற்றுள்ளன. அவற்றில் நான்கு திரைப்படங்கள், ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்தவையாகும்.

‘மெர்சல்’ திரைப்படம், இந்த வாரம் ஓடி முடிந்தாலும், 2.5 பில்லியன் இந்திய ரூபாய்களை மட்டும் கடக்குமே தவிர ‘கபாலி’ வசூலை முறியடிக்க முடியுமா என்பது சந்தேகம்தான்.
தென்னிந்திய அளவில் அடுத்த மிகப் பிரம்மாண்ட படைப்பாக ரஜினிகாந்த் நடித்துள்ள ‘2.0’ திரைப்படம் வெளிவரவுள்ளது. அந்தத் திரைப்படத்தின் வசூல் சாதனை எப்படியிருக்கப் போகிறது என்பதுதான் பலரின் கேள்வியாக உள்ளது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.