பிஎம்டபுள்யூ பைக்குடன் வலம் வர இருக்கிறார் சிம்பு

0
383

நடிகர் சிம்பு 2 நாட்களுக்கு முன்பு ஒரு வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். இந்நிலையில் இன்று BMW பைக்கில் இருக்கும் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியிட்டு வைரலாக்கி இருக்கிறார் சிம்பு.

தற்போது இளைஞர்கள் பைக் வாங்குவதில் அதிகம் ஆர்வம் காண்பித்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக விலையுயர்ந்த பைக்குகளை வாங்க ஆர்வமாக இருக்கிறார்கள்.

அதுபோல், வெளிநாட்டு பைக்குகள் மீது தற்போது கவனம் திரும்பி இருக்கிறது. நடிகர்களும் அதி நவீன வெளிநாட்டு பைக்குகளை வாங்கத் தொடங்கியுள்ளனர்.

நடிகர் சிம்புவுக்கும் அதி நவீன வெளிநாட்டு பைக்கான பிஎம்டபுள்யூ மீது கவனம் திரும்பி இருக்கிறது.

பிஎம்டபுள்யூ ஷோரூமுக்கு சென்ற சிம்பு, அங்குள்ள பைக்குகளை டிரையல் பார்த்திருக்கிறார். அத்தோடு பைக்குடன் இருக்கும் புகைப்படத்தையும் எடுத்து வெளியிட்டிருக்கிறார் சிம்பு.

201711152017468561_1_simbu55._L_styvpfஅந்த புகைப்படங்கள் சமூக வலைத் தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து சிம்பு தரப்பிடம் விசாரித்தபோது, ‘BMW கார் வாங்கத்தான் சிம்பு ஷோரூம் சென்றார். அப்போது அங்கிருந்த BMW பைக்கை பார்த்து அதை ஓட்டி பார்த்தார். விரைவில் அவர் BMW பைக்கையும் வாங்குவார் என கூறியிருக்கின்றனர்.

201711152017468561_2_simbu58._L_styvpfசிம்பு வாங்க விரும்பிய BMW பைக்கின் விலை ரூ.18 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. மிக விரைவில் BMW பைக்கில் சென்னையை வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.