மன அமைதி உண்டாகும் விரதம்

0
547

விரதம் என்பதை நம் முன்னோர் காலம் காலமாக பின்பற்றி வந்தனர். விரதம் இருந்தால் மன அமைதி கிடைக்கும். விரதம் இருக்க பல முறைகள் உள்ளன.

விரதம் என்பதை நம் முன்னோர் காலம் காலமாக பின்பற்றி வந்தது. விரதம் இருந்தால் நம் பிரச்சனைகள் தீரும் என்பது நம்பிக்கை. விரதம் இருந்தால் மன அமைதி கிடைக்கும். விரதம் இருக்க பல முறைகள் உள்ளன.

ஒரு வேளை மட்டும் உணவு அருந்தி இருப்பது,நாள் முழுவதும் எதுவும் சாப்பிடாமல் இருப்பது,அசைவ உணவுகளை மட்டும் தவிர்த்து சைவ உணவுகளை மட்டும் உண்ணுவது,நீர்,ஜூஸ், பழங்கள்,மட்டும் அருந்தி விரதம் இருப்பது என பல முறைகள் கடை பிடிக்கப்படுகின்றன.எந்த முறையில் விரதம் இருந்தாலும் பலன் கிடைப்பது நிச்சயம்.

இந்து சமுதாயத்தினரிடம் வாரம் ஒருமுறை விரதம் இருக்கும் வழக்கம் பண்டைய காலம் முதல் உள்ளது.

கடவுளின் பெயரால், பல்வேறு விசேஷ தினங்களின் பெயரால் இந்த விரதம் நடைமுறையில் உள்ளது.

ஆனால் இந்த விரதங்களுக்குப் பின்னால் மாபெரும் மருத்துவ பலன் உள்ளது தற்போது விஞ்ஞானிகளின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

வாரம் ஒரு முறை விரதம் இருந்தால் இதயம் சம்பந்தமான பிரச்சனைகள் வராது என மருத்துவ ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

விரதம் இருப்பதன் காரணமாக உடலின் மெட்டபாலிசம் புதுப்பிக்கப்படுகிறது. உடலியக்கம் சீராகிறது, தனது பணிகளை புத்துணர்வுடன் உடல் உறுப்புகள் செய்வதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

விரதம் இருக்கும் நாட்களில் உடலியக்கம் சீராவதாகவும், ரத்த ஓட்டம் சீராவதாகவும் இருப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மாதம் ஒரு முறை விரதம் இருந்தால் மாரடைப்புக்கான சாத்தியத்தை தவிர்க்கலாம் என இங்கிலாந்து விஞ்ஞானிகளின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

சிவன் கோயிலில் முதலில் வணங்க வேண்டியது அம்மனா? சுவாமியா?

201711151541242544_shiva-temple-worship_SECVPF.gifசிவன் கோவிலில் வழிபாடு செய்யும் போது சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

சிவன் கோயிலில் நுழைந்தவுடன் வாயிலில் அமைக்கப்பட்டுள்ள நந்தியின் பின்புறமாகச் சென்று அதன் சிரசு வழியாக சுவாமியை தரிசிக்க வேண்டும்.

அதனைத் தொடர்ந்து நந்திக்கு இடதுபுறமாக வந்து நின்று உள்ளே நுழைவதற்கு நந்தியம்பெருமானிடம் அனுமதி கேட்டு பிரார்த்தனை செய்ய வேண்டும்.

உள்ளே நுழைந்தவுடன் முதலில் விநாயகர், சுப்ரமணியர் ஆகியோரை தரிசனம் செய்த பின்னர் நேரே மூலஸ்தானத்தில் அருள்பாலிக்கும் ஈஸ்வரனை வணங்க வேண்டும். மூலவர் சந்நதியிலிருந்து வெளியே வந்து பிரதட்சிணம் செய்த பின்னர் அம்பாள் சந்நதிக்குச் சென்று வணங்க வேண்டும்.

இதுவே சிவாலய தரிசன முறை. மதுரை மீனாக்ஷி அம்மன் ஆலயம் போன்ற அம்பிகையின் விசேஷத் திருத்தலங்களில் முதலில் அம்பாளை வணங்கிய பின்னரே ஸ்வாமி சந்நதிக்குச் செல்ல வேண்டும்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.