பிரித்தானியாவில் இருந்து “தனது தாயை தேடி”, இலங்கை வந்தடைந்த மகள்..!! (வீடியோ)

0
872

இலங்கையில் பிறந்த பிரித்தானியாவின் பிரபல பெண் ஷெரி எசேஸன் தன்னை பெற்ற தாயை தேடி இலங்கையை வந்தடைந்துள்ளார்.

இவர் நேற்று தனது கணவருடன் பிரித்தானியாவில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

பிரித்தானியாவின் தொழில்நுட்ப துறையில் பலமான 35 பெண்களில் இணைந்துள்ள இலங்கை பெண், தனது தாயாரை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.

அண்மையில் மேற்கொண்ட DNA பரிசோதனையின் அடிப்படையில் 99.99% வீதம் தாய்க்கும், மகளுக்கும் பொருத்தம் உள்ளதாக பரிசோதனையை மேற்கொண்ட பிரித்தானிய நிறுவனம் தெரிவித்துள்ளது.

DNA பரிசோதனை வெற்றியளித்த நிலையில் தனது தாயை கண்டுப்பிடித்து, உறுதிப்படுத்தியுள்ளார்.இந்த நிலையில், தனது தாயை சந்திப்பதற்காக நேற்றைய தினம் இலங்கையை வந்தடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கடந்த1991ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி இலங்கையில் பிறந்த ஷெரி எசேஸனுக்கு, வீர முதியன்சலாகே நிரோஷிகா என பெயரிடப்பட்டது.

அவர் குழந்தையாக இருக்கும் போது அயர்லாந்து தம்பதி ஒன்றுக்கு தத்துக் கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.