50 ரூபாவிற்கு முடிவெட்டுமாறு கேட்டு தகராறு செய்தவருக்கு விளக்கமறியல் – யாழில் சம்பவம்!

0
729

யாழ்ப்பாணம் – துன்னாலை குசவப்பிட்டி பகுதியில் உள்ள சலூன் ஒன்றிற்கு சென்று தகராறில் ஈடுபட்டதுடன், அங்கிருந்த பொருட்களை அடித்துடைத்து சேதம் விளைவித்த இளைஞனை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்க பருத்தித்துறை நீதிவான் நளினி கந்தசாமி நேற்று உத்தரவிட்டார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்ட இளைஞன் குசவப்பிட்டி பகுதியில் உள்ள சலூனுக்கு சென்று 50 ரூபா கொடுத்து முடிவெட்டுமாறு கேட்டு தகராறில் ஈடுபட்டார்.

அதற்கு மறுத்த கடை உரிமையாளர், சங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட பணத்துக்கே முடி வெட்டமுடியும் என கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த இளைஞன் அங்கிருந்த பொருட்களை அடித்து சேதம் விளைவித்தார்.

இது தொடர்பில் நெல்லியடி பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து இளைஞன் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.