2 தடவைகள் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தாயின் கணவன்!! 20வருட சிறை தண்டனை!!

0
769

வவுனியா – மறவன்குளம் பகுதியில் 16 வயதிற்கு குறைந்த சிறுமி ஒருவரை பாலியல் வன்புனர்வு புரிந்த குற்றத்திற்காக 55வயதுடைய சிறிய தந்தைக்கு 20 வருட கடூழியச்சிறைத் தண்டனையை வழங்கி வவுனியா மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2003ஆம் ஆண்டு மறவன்குளம் பகுதியில் தனிமையிலிருந்த 16 வயதிற்கு குறைந்த சிறுமியை தாயின் இரண்டாவது கணவனான 55 வயதுடைய வைரமுத்து சிவலிங்கம் இரண்டு தடவைகள் பாலியல் வண்புனர்வுக்குட்படுத்தியுள்ளார்.

இதையடுத்து குறித்த நபரை வவுனியா பொலிஸார் கைது செய்து, விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

கடந்த வருடம் அக்டோம்பர் மாதம் 26ஆம் திகதி சட்டமா அதிபர் திணைக்களத்தினால் குறித்த எதிரிக்கு எதிரான குற்றப்பகிர்வுப்பத்திரம் வவுனியா மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணைகள் இடம்பெற்று விளக்கம் முடிவுறுத்தப்பட்டு இன்றைய தினம் தீர்ப்பிற்கு திகதி குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனடிப்படையில் வழக்கு விசாரணைகளை மேற்கொண்ட வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் சந்தேக நபர்  இரண்டு தடவைகள் சிறுமியை பாலியல் வண்புனர்வுக்குட்படுத்தியமையால்  குற்றவாளியாக அடையாளப்படுத்தி, எதிரிக்கு எதிரான குற்றச்சாட்டுக்களில் முதலாவது குற்றச்சாட்டிற்கு 10வருட கடூழியச்சிறைத் தண்டனையும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இரண்டு இலட்சம் ரூபா நஷ்டஈடாக செலுத்துமாறும் அதைச் செலுத்தத்தவறினால் மேலும் இரண்டு வருடம் கடூழிறச்சிறையும் அனுபவிக்கவேண்டும் எனவும் தண்டப்பணமாக 10000 ரூபாவினையும் செலுத்தமாறும் அதைச் செலுத்தத்தவறினால் ஒரு மாதம் சாதாரண சிறையையும் அனுபவிக்க நேரிடும் எனவும்

இரண்டாவது குற்றச்சாட்டுக்கு 10வருட கடூழியச்சிறை தண்டனையும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இரண்டு இலட்சம் ரூபா நஷ்ட ஈடாக செலுத்துமாறும் அதைச் செலுத்தத்தவறினால்  இரண்டு வருடம் கடூழியச்சிறைத்தண்டனை அனுபவிக்கவேண்டும் எனவும் தண்டப்பணமாக 10000ரூபாவினைச் செலுத்துமாறும் அதை செலுத்தத்தவறினால் ஒரு மாதம் சாதாரண சிறை தண்டனையும் அனுபவிக்க நேரிடும் எனவும் இந்த இரண்டு தண்டனைகளையும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் தனது தீர்ப்பில் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.