“ஏப்ரலில் திருமணம் செய்யப் போகிறாரா நடிகர் ஆர்யா? வைரலான ஜிம் விடியோ!”

0
203

சென்னை : ஏப்ரலில் திருமணம் செய்யும் திட்டம் உள்ளதாக ஜிம் ஒன்றில் உடற்பயிற்சி செய்தபடி நடிகர் ஆர்யா பேசும் விடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

தமிழ் சினிமா கதாநாயகர்களில் ரொம்ப காலமாக திருமணம் செய்து கொள்ளாமல் பிரம்மச்சாரியாக இருப்பவர்களில் நடிகர் ஆர்யாவும் ஒருவர்.

பல கதாநாயகிகளுடன் இவரை இணைத்து இதுவரை கிசுகிசுக்களும் வந்திருக்கின்றன. ஆனால் திருமணம் பற்றி எந்தச் செய்திகளும் இதுவரை வெளிவந்தது கிடையாது.

பொதுவாக தன்னுடைய உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள நடிகர் ஆர்யா எப்போதும் ஆர்வம் காட்டுவார்.

அதன் பொருட்டு சைக்ளிங், ஜிம்மில் வொர்க்-அவுட் செய்யும்போது எடுத்த வீடியோக்களையும் அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து பகிர்ந்து வருவார்.

இந்நிலையில் ஆர்யா ஜிம் ஒன்றில் உடற்பயிற்சி செய்துகொண்டிருக்கும் போது நண்பர் ஒருவருடன் உரையாடும் பொழுது எடுக்கப்பட்ட விடியோ ஒன்று தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

அந்த விடியோவில் நண்பர் ஆர்யாவிடம், ‘காதலிக்கும் பெண்களையே கல்யாணம் பண்ணிக்கலாமே எனக் கேட்டதற்கு, ‘லவ் பண்ற பொண்ணுங்க எதுவும் செட்டாகலயே..

நான் என்ன வச்சுக்கிட்டா வஞ்சனை பண்றேன்’ என ஆர்யா நகைச்சுவையாக பதிலளித்திருக்கிறார்.

அத்துடன் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் பேப்பரில் பெண் வேண்டும் என்று விளம்பரம் கொடுக்கலாம் என்று இருக்கிறேன்’ என்றும் அவர் பதில் சொல்கிறார்

விடியோ:

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.