“என் ஸ்லிம் சீக்ரெட் ரெண்டு வருச கதை..!’ – கீதாஞ்சலி செல்வராகவன்

0
57

காதல் கதைகளை வித்தியாசமான திரைக்கதையால் காட்சிப்படுத்தி, பல இளைஞர்களின் ஃபேவரைட் டைரக்டர் லிஸ்டில் இடம் பிடித்தவர், இயக்குநர் செல்வராகவன்.

இவர் இயக்கிய ‘நெஞ்சம் மறப்பதில்லை’ டீஸர் வைரலாகப் பரவி படம் குறித்த ஆவல் அதிகரித்துக்கொண்டிருக்கும் நிலையில், ட்விட்டரில் அவர் பதிவிட்ட ஒரு புகைப்படமும் வைரல் ஆகியிருக்கிறது.

ஆனால், அது தனது திரைப்படம் குறித்த புகைப்படமல்ல, மனைவி கீதாஞ்சலியுடனான புகைப்படம். யெஸ்… திருமணம் ஆன புதிதில் குண்டாக இருந்த செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி, இப்போது ஸ்லிம் பியூட்டி! ‘ஏன் இந்த மாற்றம்?’ – கீதாஞ்சலியிடம் பேசினேன்.

Selvaragavan_10189‘ஹாய் நான் ரொம்ப ஹாப்பியாக இருக்கேன். லைப் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது’’ என்று மகிழ்ச்சியாகப் பேச ஆரம்பிக்கிறார் கீதாஞ்சலி. ”குண்டாகயிருக்கிறேன் என்றக் காரணத்தால் எடையைக் குறைக்க வேண்டும் என்றெல்லாம் நான் எடையைக் குறைக்கவில்லை.

எனக்கு ஹிப் ப்ராப்ளம் இருந்தது. ஹிப்பில் இருக்கும் எலும்பு சேரும் இடத்தில் வலி இருந்தது.

இது பதினைந்து வருடங்களுக்கு முன்னால் இருந்தே இருந்தது. அதனால் டாக்டர் எனக்கு அட்வைஸ் பண்ணியிருந்தார். எடையைக் குறைத்தால் உடல்நிலைக்கு  நல்லதுனு. அதனால் உடல்நலத்தை பாதுகாக்க வேண்டித்தான் உடல் எடையைக் குறைத்தேன்.

உடல் எடையைக் குறைக்க டாக்டர் எனக்கு இரண்டு வருடம் டைம் கொடுத்தார். அதனால் இரண்டு வருடமாகப் போராடி என் எடையைக் குறைத்தேன். என் ஹிப்புக்கு எவ்வளவு எடை இருந்தால் உடல்நலத்துக்கு நல்லதோ அதற்கு ஏற்ற மாதிரி டாக்டர் அட்வைஸ் கேட்டபிறகுதான் குறைக்க ஆரம்பித்தேன்.

சென்னை மெட்ராஸ் கிளப்பில்  உறுப்பினராக நான் இருக்கிறேன். அதனால் அங்குச் சென்றுதான் ஒர்க்அவுட் பண்ணினேன்.

கார்டியோ எக்ஸஸைஸ் இரண்டு மணிநேரம் பண்ணினேன். நடப்பேன், இருபது நிமிடம் ஓடுவேன். 45 நிமிடங்கள் மற்ற சில எக்ஸஸைஸ், அரைமணி நேரம் நீச்சல் அடிப்பேன்.

இவைதவிர டயட் இருந்தேன். டயட் இருப்பதுதான் ரொம்ப கஷ்டம். நாம் விருப்பட்ட உணவைச் சாப்பிட முடியாது. நிறைய டயட்டிஸிடம் சென்றேன்.

எனக்கு எப்போதும் ஹை ப்ரோட்டின் டையட்தான் கரெக்டா இருக்கும். நான்வெஜிடேரியன் டையட் எனக்கு ஈஸி. நிறையப் பச்சை காய்கறிகள், மீன், முட்டை இதையெல்லாம் சாப்பிட்டேன்.

selva_4_15556

இது எல்லாத்துக்கும் மேலாகக் கஷ்டமான ஒரு விஷயம் சுரைக்காய் ஜூஸ் குடிப்பது. ரொம்ப கேவலமாகயிருக்கும்.

ஆனா, காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சுரைக்காய் ஜூஸ் குடுப்பேன். தைராய்டு மாத்திரை போட்டுக்குற மாதிரி காலையில் இந்த ஜூஸை குடிக்கணும்.

அதற்கு அப்புறம் நெல்லிக்காய் மற்றும் கறிவேப்பிலை ஜூஸ் குடிக்கணும். உப்பு, சர்க்கரை எதுவும் சேர்க்காமல் அப்படியே ஒரு கிளாஸ் குடிச்சிரணும். அப்புறம் நிலவேம்பு கசாயம் வேறு குடிக்க வேண்டும்.

டயட்டில் நிறைய வகைகள் இருக்கு. சில டயட்ஸ்  இரண்டு மாதத்தில் உடம்பைக் குறைத்து விடும்னு சொல்லுவாங்க. பட், அதற்கு அப்புறம் நம்ம டயட்டை விட்டுவிட்டால் பழைய நிலைமைக்கு உடம்பு திரும்பி விடும்.

அதனால்தான் நான் ஹெல்த்தியான டயட்டாக எடுத்துக் கொண்டேன். ஒரு இரண்டு வருடங்கள் இது எல்லாவற்றையும் ஃபாலோ பண்ணினேன்.

என் எடையைக் குறைத்து கிட்டத்தட்ட பத்து மாதங்கள் ஆகப் போகிறது. என்னுடைய பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என எல்லாவற்றிலும் நான் என் போட்டோகளை அடிக்கடி போஸ்ட் செய்வேன்.

ஆனால், ரொம்ப ப்ரைவஸியாக என் குடும்பத்தில் இருப்பவர்களும் என் நண்பர்கள் மட்டும் என் போட்டோக்களை பார்க்கும்படிதான் வைத்திருப்பேன். அதனால் நிறையப் பேருக்கு நான் எடை குறைத்த விஷயம் தெரியாமல் இருக்கலாம்.

என் வீட்டில் இருந்த யாருக்கும் என் எடையைக் குறைத்த விஷயம் பெரிய ஷாக்காக இருக்கவில்லை.

ஏன்னா, என்னை அவர்கள் தொடர்ந்து பார்த்துக்கொண்டுதான் இருந்தார்கள். பட், எனக்கு நீளமான முடி இருக்கும். அதைச் சின்னதாக கட் செய்து விட்டேன்.

அப்போதுதான் வீட்டில் இருந்தவர்களுக்குப் பெரிய ஷாக்காக இருந்தது. ”ஹே ஏன் ஹேர் கட் பண்ணிட்டே” அப்படினு கேட்டார்கள். ஹேர் கட் கூட நான் ஸ்டைலாக இருக்க வேண்டுமென்று பண்ணவில்லை.

seee_15002

என் கணவர் செல்வா அதிகமாக என் போட்டோக்களை ட்விட்டரில் பதிவு செய்யமாட்டார். சமீபத்தில் அவர் பதிவு செய்த அந்தப் போட்டோ எங்கள் குடும்ப நிகழ்ச்சியில் எடுத்தப் போட்டோ.

அதனால் அவர் ட்விட்டரில் போஸ்ட் பண்ணினார். அந்தப் போட்டோ பலருக்குப் பிடித்திருந்தது.

பலபேர் ”செல்வா ஏன் சிரிக்கவேயில்லை”னு கேட்டிருந்தார்கள். அவர் எப்போதும் அப்படிதான் சிரிக்கவே மாட்டார். நான் போட்டோவுக்கு போஸ் கொடுக்கச் சொன்னால் அழகாக சிரித்துக் கொண்டேயிருப்பேன்.

போட்டோ எடுத்து கொண்டேயிருப்பேன். எனக்கு அது பிடிக்கும்” என்றவரிடம், ”மாலை நேரத்து மயக்கம்’ படத்துக்குப் பிறகு ஏன் வேறு எந்தப் படங்களும் இயக்கவில்லை என்றால்,

”என் அம்மா வீட்டில் எல்லோரும் லாயர்ஸ். எனக்கும் சின்ன வயதிலிருந்து லாயர் ஆகணும்னு ஆசையிருந்தது.

ப்ளஸ் ஒன் படிக்கும் போதுதான் எனக்கு லாயர் தவிர கேரியரில் இன்னோரு வாய்ப்பு இருக்குங்கிற விஷயமே தெரியவந்தது. அப்போதிலிருந்து சினிமாவில் டைரக்டர் ஆகணும்னு ஆசைப்பட்டு டைரக்டர் ஆகிவிட்டேன்.

என் திருமணத்துக்கு முன்னால் இருந்தே எனக்கு செல்வாவை தெரியும். அவரிடம் வேலைப் பார்த்திருக்கிறேன்.

நல்ல நண்பர்கள் நாங்கள். எங்கள் நட்பு பற்றி வீட்டில் இருந்தவர்களுக்கு நல்லாவே தெரியும். அப்புறம் அப்படியே திருமணம் நடந்து விட்டது.

அவர் ரொம்ப ஜாலியான கேரக்டர். வீட்டில் பசங்கலிடம் ஜாலியாக விளையாடிக் கொண்டேயிருப்பார்.

திருமணம் முடிந்தவுடன் செல்வா ஸ்க்ரிப்ட் எழுதுவதை எல்லாம் பார்ப்பேன். அவருடைய ஃபேவரைட் ஸ்க்ரிப்ட் தான் ‘மாலை நேரத்து மயக்கம்’.

செல்வாதான் கதை எழுதியிருந்தார். படத்தை நான் இயக்க வந்த போது கதையில் சில மாற்றங்கள் செய்து இயக்கினேன்.

அதற்குப் பிறகு படங்கள் இயக்குவதற்கு ஆவலாகயிருந்தேன். பட், செல்வாவின் அடுத்த புரொஜக்ட்டான ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்துக்காக நானும் கொஞ்சம் பிஸியாகிவிட்டேன்.

பசங்களை பார்த்து கொள்வது, என்னை, அவரைப் பார்த்து கொள்வது எனக் கொஞ்சம் பிஸி.  தற்போது சில வேலைகள் இருக்கிறது. அதையெல்லாம் முடித்துவிட்டுக் கண்டிப்பாக படம் இயக்குவேன்’’ என்று சொல்லி விடைபெற்றார் கீதாஞ்சலி.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.