இராஜகிரிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து: பிரபல பாடசாலை மாணவர் உயிரிழப்பு: 9 பேர் காயம்- (வீடியோ)

0
281

இராஜகிரிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தின் போது சம்பவத்துடன் தொடர்புடைய வாகனத்தைச் செலுத்திய பாடசாலை மாணவனின் சாரதி அனுமதிப்பத்திரம் இதுவரை பொலிஸாரிடம் சமர்ப்பிக்கப்படவில்லை என்பதுடன் 3 மாணவர்களின் நிலை தொடர்ந்தும் கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இராஜகிரிய, சில்வா குறுக்குவீதியில் நேற்றுக் காலை குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கெப் ரக வாகனம் ஒன்று மதில் ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் குறித்த வாகனத்தில் பயணித்த கொழும்பு ரோயல் கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் உயிரிழந்தார்.

மேலும் 9 மாணவர்கள் காயமடைந்துள்ள நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களில் நால்வரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக நேற்று பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த கெப் ரக வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இதேவேளை, குறித்த கெப் ரக வாகனத்தை தொடர்ந்து பயணித்த சிறிய ரக வாகனமொன்றும் மதிலில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த வானத்தையும் மாணவரகளே செலுத்திச் சென்றுள்ளமை சி.சி.ரிவி. காணொளி மூலம் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், விபத்துடன் தொடர்புடைய கெப் ரக வாகனத்தைச் செலுத்திய சாரதியான பாடசாலை மாணவரின் சாரதி அனுமதி பத்திரம் இதுவரை பொலிஸாரிடம் சமர்ப்பிக்கப்படவில்லை.

காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவரும் குறித்த விபத்துடன் தொடர்புடைய கெப் ரக வாகனத்தைச் செலுத்திய மாணவன் தன்னிடம் சாரதி அனுமதி பத்திரம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சிகிச்சைபெற்றுவரும் 9 மாணவர்களில் 3 மாணவர்களின் நிலை கவலைக்கிடமான நிலையில் தீவிரசிகிச்சைப் பிரிவில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இது­தொ­டர்­பாக பொலிஸ் ஊட­கப்­பேச்­சாளர் அலு­வ­ல­கத்தின் அதி­காரி ஒருவர் தெரி­விக்­கையில்,

accidentasssaபாட­சா­லையில் நேற்று நடை­பெ­ற­வி­ருந்த ஊடக விழா­வுக்­கான ஏற்­பா­டு­களை நேற்று முன்­தி­ன­மி­ரவு மேற்­கொண்­டு­விட்டு சென்ற போதே ராஜ­கி­ரிய பகு­தியில் இந்த விபத்துச் சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது.

கொழும்பு ரோயல் கல்­லுரி மாண­வர்கள் 10பேர் பய­ணித்த டபல் கெப் ரக வாகனம் நேற்று அதி­காலை 1. 50மணி­ய­ளவில் ராஜ­கி­ரிய சில்வா மாவத்­தையில் விபத்­துக்­குள்­ளா­கி­யுள்­ளது. மாண­வர்கள் நிகழ்­வொன்றில் கலந்­து­கொண்­டு­விட்டு வீட்­டுக்கு திரும்­பும்­போதே இந்த விபத்து இடம்­பெற்­றுள்­ளது.

ராஜ­கி­ரிய சில்வா மாத்­தைக்கு அருகில் மொரகஸ் முல்­லயில் இருந்து ராஜ­கி­ரிய நோக்கி பய­ணித்த வாக­னத்தை செலுத்தி வந்த மாண­வ­னுக்கு அந்த இடத்தில் இருந்த வலைவில் வேகத்தை கட்­டுப்­ப­டுத்த முடி­யாமல் அருகில் இருந்த வீடொன்றின் மதிலில் மோதி­யுள்ள நிலையில் வாகனம் விபத்­துக்­குள்­ளா­கி­யுள்­ளது.

விபத்தில் உயர்­தர வகுப்பில் கல்வி கற்­று­வரும் கல்­கி­சை­யைச்­சேர்ந்த அமான் கிசன் மொஹமட் அமான் கிசில் என்ற 18வயது என்ற மாணவன் உயி­ரி­ழந்­துள்­ள­துடன் வாகனத்தில் இருந்த 9பேர் காய­ம­டைந்­த­துடன் கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லையின் அவ­சர சிகிச்சை பிரிவில் அனு­ம­திக்­கப்­பட்­டனர்.

பின்னர் அவர்­களில் 3பேர் அதி­தீ­விர சிகிச்சை பிரிவில் அனு­ம­திக்­கப்­பட்டு சிகிச்சை பெற்­று­வ­ரு­கின்­றனர்.

இதே­வேளை, இந்த கெப் வாக­னத்­துக்கு பின்னால் வந்த மற்­று­மொரு கார் இந்த மதிலில் மோதி­யதில் வாக­னத்தின் சாரதி காய­ம­டைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுளார்.

விபத்து தொடர்­பாக வெலிக்­கடை பொலிஸார் தொடர்ந்து விசா­ர­ணை­களை மேற்­கொண்டு வரு­கின்­றனர்.

விபத்தில் உயி­ரி­ழந்த ரோயல் கல்­லூ­ரியின் உயர்­தர வகுப்பு மாண­வனின் . இறுதி கிரியை நேற்று இரவு நடை­பெற்­றது.தெஹி­வளை மைய­வா­டியில் ஜனாசா நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­டது. சம்­ப­வத்தில் காய­ம­டைந்­த­வர்­களில் இருவர் 9ஆம் ஆண்டு மாணவர்களாவர்.

விபத்தையடுத்து ரோயல் கல்லூரியில் நேற்று நடைபெறவிருந்த ஊடக விழா இலக்கிய விழா என்பன பிற்போடப்பட்டுள்ளன. இன்று நடைபெறவிருந்த நூல் வெளியீட்டு விழாவும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.