யாழ்ப்பாணத்தில் தொடர்ந்தும் பெய்து வரும் பலத்த மழை காரணமாக 10,000 பேர் பாதிப்பு (படங்கள், வீடியோ)

0
233

யாழ்ப்பாணத்தில் தொடர்ந்தும் பெய்து வரும் பலத்த மழை காரணமாக 10,000 பேர் பாதிப்பு

யாழ்ப்பாணத்தில் தொடர்ந்தும் பெய்துவரும் பலத்த மழை காரணமாக சுமார் 10000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

2727 குடும்பங்களை சேர்ந்தவர்களே பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் யாழ். மாவட்ட உதவிப் பணிப்பாளர் சங்கரப்பிள்ளை ரவி குறிப்பிட்டுள்ளார்.

அவர்களில் 456 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இடைத்தங்கல் முகாம்களிலும், நண்பர்கள் உறவினர்கள் வீடுகளிலும் தங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பலத்த மழைக் காரணமாக சுமார் 42 வீடுகள் முழுமையாகவும் 172 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துள்ளன.

நல்லூர், பருத்தித்துறை, கோப்பாய், சுன்னாகம் உள்ளிட்ட பகுதிகளே மழைக் காரணமாக அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களுக்கான உலர் உணவுப் பொருட்கள் பிரதேச செயலகங்களூடாக விநியோகிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடமராட்சி கிழக்கு நாகர்கோயில் பகுதியில் நிலவிய கடும் மழைக் காரணமாக மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

வீடுகளுக்குள் வௌ்ளம் புகுந்துள்ளமையால் மக்கள் இடம்பெயர்ந்து உறவினர் வீடுகளில் தங்கியுள்ளனர்.

இதேவேளை கிளிநொச்சி பச்சிலைப்பள்ளிக்கு உட்பட்ட இத்தாவில் கிராமத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் பலத்த மழையினால் 15 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 3 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் மழை காரணமாக முல்லைத்தீவு நந்திக்கடலின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.

500 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலம் நீரில் மூழ்கியுள்ளது.

இதனைகருத்திற் கொண்டு வட்டுவாகல் ஆற்றுமுகத்துவாரம் இன்று வெட்டி விடப்பட்டுள்ளது.

இந்த பிரச்சினை தொடர்பில் நேற்று நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்திலும் கலந்துரையாடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ASD04ASD06ASD09ASD11ASD44ASD47ASD39ASD03ASD51

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.