“வேறு ஒரு விஷயம்; சீக்கிரம் தெரிய வரும்: ரசிகர்களுக்கு சிம்புவின் புது விடியோ!”

0
165

சென்னை: தனது அடுத்தடுத்த திரையுலக திட்டங்கள் குறித்து, ‘வேறு ஒரு விஷயம் இருக்கிறது; சீக்கிரம் தெரிய வரும் என்று ரசிகர்களுக்கு வெளியிட்ட புது விடியோ ஒன்றில் நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட சில காரணங்களால் நடிகர் சிம்பு சில காலங்களாக சமூகவலைத்தளத்திலிருந்து முழுமையாக வெளியேறினார்.

பின்னர் எந்ததொரு நிகழ்ச்சியிலுமே கலந்து கொள்ளவில்லை. மணிரத்னத்துடன் தனது அடுத்த படம், இசையமைப்பு என கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் நீண்ட நாட்கள் கழித்து தனது ரசிகர்களுக்காக வீடியோ பதிவொன்றை தற்பொழுது சிம்பு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

அனைவருக்கும் வணக்கம். ‘சக்க போடு போடு ராஜா’ படத்தின் பாடல்களுக்கும், ட்ரெய்லருக்கும் நல்ல வரவேற்பு கொடுத்ததிற்கு நன்றி.

உங்கள் அனைவரிடமும் பேசி நீண்ட நாட்களாச்சு, அதனால் பேச வேண்டும் என தோன்றியது. எனது மற்ற பாடலுக்கு நல்லதொரு வரவேற்பு கொடுத்து வருகிறீர்கள்.

சமூகவலைத்தளத்தில் இல்லாததால் ரசிகர்களிடம் பேசி ரொம்ப நாளாகிவிட்டது. உங்களை ரொம்ப மிஸ் பண்ணுகிறேன். நீங்கள் அனைவருமே இருக்கும் போது பார்த்துக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இது படத்தின் கெட்டப் எல்லாம் கிடையாது. வேறொரு விஷயம் சீக்கிரத்திலேயே வருகிறது. மீண்டும் வருவேன். நம்புங்கள்!

இவ்வாறு அந்த விடியோவில் சிம்பு தெரிவித்துள்ளார்.

விடியோ:

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.