சென்னை திரையரங்குகளுக்கு நடிகை நயன்தாரா நேரில் வருகை! ரசிகர்கள் உற்சாகம்! (படங்கள்)”

0
317

பொதுவாக, தன்னுடைய படங்களின் விளம்பர நிகழ்ச்சிகளில் நயன்தாரா பங்கேற்பதில்லை. ஆனால் அறம் படத்துக்காகத் தன்னுடைய கெடுபிடிகளைத் தளர்த்தியுள்ளார்.

நயன்தாரா நடிப்பில் கோபி நயினார் இயக்கியுள்ள படம், அறம். இதில் நயன்தாராவுக்கு மாவட்ட ஆட்சியர் வேடம். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு, பீட்டர் ஹெய்ன் சண்டைப்பயிற்சி.

நேற்று வெளியான அறம் படம், தொடர்ந்து அற்புதமான விமரிசனங்களைப் பெற்று வருகிறது. படம் பார்த்த பலரும், நல்ல படங்களுக்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என்கிற வேண்டுகோளுடன் படத்தைப் பாராட்டி ஊக்குவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் அறம் படத்தின் வெற்றிக்காக அதன் விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்க நயன்தாரா முன்வந்துள்ளார்.

இதையடுத்து சென்னை காசி திரையரங்குக்கு அவர் வருகை தந்தார். 10 நிமிடங்கள் ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்த்தார்.

இதனால் ரசிகர்கள் மிகவும் உற்சாகம் அடைந்தார்கள். பிறகு உதயம் திரையரங்குக்கும் சென்று ரசிகர்களைச் சந்தித்தார். இதன் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

இதையடுத்து மேலும் பல திரையரங்குகளுக்கு நேரில் சென்று ரசிகர்களைச் சந்திக்க நயன்தாரா திட்டமிட்டுள்ளார்.

nayan12-11-1510406057

nayan11nayan33

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.