கொண்டவனுக்கு இல்லாத உரிமை இடையில் வந்த ராஜாவுக்கா?

0
180

அந்­தநாள் ஞாப­கத்தில் 1956 ஆம் ஆண்டு கவிஞர் கண்­ண­தா­சனின் திரைக்­கதை வசனத்தில் எம்.ஜி.ஆர், பானு­மதி, பத்­மினி நடித்து வெளிவந்த மது­ரை­வீரன் திரைப்படத்தில் “கொண்­ட­வ­ளுக்கு இல்­லாத உரிமை இடையில் வந்­த­வ­ளுக்கு இருப்பது­தானே ஆண்டாண்டு கால­மாக உல­கத்தில் நடந்து வரும் அதி­சயம்” என்று கதா­நா­யகி பொம்­மி­யாக நடித்து பானு­மதி பேசிய வசனம் தான் இங்கே “கொண்­டவனுக்கு இல்­லாத உரிமை இடையில் வந்த ராஜா­வுக்கா?” என்று அர­சியல் தலைப்­பாக மேலே மாறி­யுள்­ளது!

இதோ:

மெகா சீரி­ய­லையும் மிஞ்­சிய திருப்­பங்­க­ளுடன் பய­ணித்த தீபா – மாதவன் குடும்பத் தக­ராறு மீண்டும் வீதிக்கு வந்­தி­ருக்­கி­றது.

தீபாவின் நண்­பரும் கார் டிரை­வ­ரு­மான ராஜா­வினால் கணவன் –மனை­விக்­கி­டையே பிரிவு ஏற்­பட்டு இணைந்­த­வர்கள், தற்­போது மீண்டும் பிரிந்­துள்­ளனர். விவ­காரம் இப்­பொ­ழுது காவல்­நி­லை­யத்தின் படி­யே­றி­யுள்­ளது!

ஜெய­ல­லி­தாவின் மறை­விற்குப் பிறகு அ.தி.மு.க.வையும் இரட்டை இலை­யையும் மீட்பேன் என்று சூளு­ரைத்து அவ­ரது அண்ணன் மகள் தீபா அர­சி­யலில் குதித்தார்.

சூளு­ரைத்த சூடம் அணை­வ­தற்குள் குடும்­பத்தில் பனிப்போர் வெடிக்­கவே வீட்டை விட்டு வெளியே அனுப்­பப்­பட்ட அவ­ரது கணவர் மாதவன் தனிக்­கட்சி தொடங்­கினார்.

இத்­த­னைக்கும் தீபாவின் நண்பர் டிரைவர் ராஜாதான் காரணம் என்று செய்­திகள் பர­விய நிலையில், மாத­வனே தற்­போது உண்­மையை உடைத்­துள்ளார்.

கடந்த மாதம் 27 ஆம் திகதி மாம்­பலம் காவல்­நி­லை­யத்­திற்கு வந்த மாதவன், டிரைவர் ராஜா தனக்குக் கொலை மிரட்டல் விடுப்­ப­தா­கவும் தன்­னு­டைய பாது­கா­வ­லர்­களைத் தாக்க முயற்­சிப்­ப­தா­கவும் அதி­ரடி புகார் அளித்தார்.

பொலிஸார் விசா­ரித்துக் கொண்­டி­ருக்கும் பொழுதே டிரைவர் ராஜா சகிதம் திடீ­ரென அங்கு பிர­சன்­ன­மான தீபா, என் புருஷன் சொல்­வதில் எந்த உண்­மையும் இல்லை.

ராஜா ரொம்ப நல்­லவர் என்று சர்­டி­பிகேட் கொடுக்­கவே இந்­தம்மா எதுக்கு இடை­யில வந்து வண்­டி­யில ஏறுது? பிரச்­சினை மாத­வ­னுக்கும் ராஜா­வுக்கும் தானே என்று பொலி­ஸாரே குழம்பிப் போய் என்ன குடும்­ப­மடா இது என்று ஒரு­வ­ழி­யாக மாத­வனின் புகாரில் எப்.ஐ.ஆர். பதிவு செய்து விட்டு அனுப்­பினர்.

004_11070தீபா-மாதவன்

சோகத்தின் உச்­சத்தில் தத்­த­ளித்த மாத­வ­னிடம் பேசி­ய­போது; கடந்த 26 ஆம் திகதி இரவு தீபாவின் வீட்­டிற்குள் வந்த ராஜா, என்­னு­டைய பாது­கா­வ­லர்கள் சுந்தர், சிவா, ஜெரோம் பாண்­டி­யராஜ் ஆகி­யோரை மிரட்­டினார்.

தட்­டிக்­கேட்ட எனக்கும் கொலை மிரட்டல் விடுத்தார். ஆகவே, உட­ன­டி­யாகப் பொலிஸ் கட்­டுப்­பாட்டு அறை 100 க்கு அழைத்துப் புகார் செய்தேன்.

ராஜா­வினால் எனக்கும் தீபா­வுக்கும் பிரிவு ஏற்­பட்­ட­தாக முதன்­மு­த­லாகக் கரு­து­கிறேன். ராஜா­வுக்கும் தனக்கும் என்ன தொடர்பு என்பதைத் தீபாதான் தெளி­வு­ப­டுத்த வேண்டும். மனதில் 100 டன் பாரத்தை ஏற்றி வைத்­தது போல் கனக்­கி­றது என்­ற­வரின் கண்கள் குளமா­கின.

கடந்த மாதம் 25 ஆம் திகதி ஜெயாவின் மர­ணத்தில் சி.பி.ஐ. விசா­ரணை கேட்டு குடி­யாத்­தத்தில் கண்­டன ஆர்ப்­பாட்டம் நடத்­தினார் தீபா.

அங்­கேயே மாத­வ­னுக்கும் ராஜா­விற்கும் முட்­டிக்­கொண்­டதாம். மாதவன் ஆத­ர­வா­ளர்கள் கூறு­கையில், பய­ணக்­க­ளைப்பில் பண்ணை வீட்டில் தீபா படுத்­தி­ருக்­கவே திடீ­ரென படுக்கை அறைக்குள் நுழைந்த டிரைவர் ராஜா என்­னாச்சு என்று கேட்­டி­ருக்­கிறார்.

1_16415தீபா- ராஜா

காய்ச்சல் வர்ற மாதிரி இருக்கு என்று தீபா கூறவும் உடனே அவ­ரது கழுத்தில் கையை வைத்து உடலில் சூடு இருக்­கி­றதா என ராஜா சோதித்­துள்ளார்.

இதைப் பார்த்துக் கொண்­டி­ருந்த மாத­வ­னுக்குக் கோபம் தலைக்­கே­றி­விட்­டது. தன் முன்­னி­லை­யி­லேயே தன் மனைவி மீது டிரைவர் கை வைத்தால் யாரால்தான் சகித்­துக்­கொள்ள முடியும்?

உனக்கு இங்க என்ன வேலை? வெளியே போ என்று மாதவன் கோபத்­துடன் சொல்­லவே அதை அவ சொல்­லட்டும் என்று தீபாவைப் பார்த்­தப­டியே நின்­றுள்ளார் டிரைவர் ராஜா.

தீபாவோ எந்த ரியாக் ஷனும் இல்­லாமல் அமை­தி­யாக இருக்­கவே மாத­வ­னுக்கு உடல் கூனிக்­கு­றுகி விட்­டது.

அதன் வெளிப்­பாடே இந்தப் புகார். மாத­வ­னோடு வாழப் பிடிக்­க­வில்லை என்றால் விவா­க­ரத்துச் செய்­து­விட்டுப் போக வேண்­டி­ய­து­தானே? எதற்­காக அவர் வாழ்க்­கை­யையும் கெடுத்து, தன் பெய­ரையும் தீபா கெடுத்துக் கொள்ள வேண்டும் என்று கொதித்­தனர். இதெல்லாம் அர­சி­யலில் சக­ஜ­மப்பா!

தீபா, ராஜா இரு­வரின் கருத்­த­றிய பல­முறை முயற்சி மேற்­கொண்டோம். இரு­வ­ரது எண்­களும் சுவிட்ச் ஆப் நிலை­யி­லேயே இருந்­தன.

தீபாவின் இல்­லமும் மூன்று நாட்­க­ளாகப் பூட்­டியே உள்­ளது. அலு­வ­லகம், வீடு இரண்டின் சாவிகளும் தூத்­துக்­கு­டியைச் சேர்ந்த வழக்­க­றிஞர் சுப்­பி­ர­மணி என்­ப­வ­ரி­டத்தில் தான் உள்­ளது.

இதற்­கி­டையே நவம்பர் முதலாம் திகதி நாகர்­கோ­விலில் ஏற்­பாடு செய்­தி­ருந்த பொதுக்­கூட்­டத்­தையும் தள்­ளி­வைத்து விட்டார் தீபா.

விசா­ரித்­ததில், டிரைவர் ராஜா­வுக்கு ஜாமீன் கிடைக்கும் வரையில் வெளியே வர­வேண்டாம் என உற­வினர் வீட்டில் பதுங்­கி­யி­ருப்­ப­தாகக் கூறி­னார்கள்.

தீபாவின் செயற்­பா­டு­க­ளினால் கோபத்தின் உச்சிக்குச் சென்றுள்ள பேரவை நிர்வாகிகளோ மாதவன், ராஜா இருவரையும் விரட்டி விட்டுப் பேரவையை ஒழுங்காக நடத்துங்கள்.

அல்லது நாங்கள் கொடுத்த பணத்தைத் திரும்பத்தாருங்கள் என்று கேட்டு விரைவில் வீட்டை முற்றுகையிடப் போகிறார்களாம்! என்ன குடும்பமடா இது? ஜெயலலிதா வாழ்க்கையில் ஒரு சசிகலா மாதிரி, தீபா வாழ்க்கையிலும் ஒரு சாரதியா என்று சந்தி சிரிக்கிறதாம்!

தகவல்கள்: ஷண்

எச்சக்கல, புறம்போக்கு, நாய்… அக்க தீபா தம்பியை பார்த்து பேசும் பேச்சை கேளுங்கள்!! இவா எல்லாம் தமிழ் நாட்டை ஆளப்போறாவாம்?? -வீடியோ

 

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.