சங்கானையில் மிகச் சிறப்பாக நடாத்தப்படும் இலையான் பண்ணை!- (வீடியோ)

0
337

யாழ்ப்பாணம் யா/சண்டிலிப்பாய் ஜே/143 கிராமசேவகர் பிரிவில் மக்கள் செறிவாக வசிக்கும் பகுதியில் உரிய அனுமதியின்றி நடாத்தப்படும் கோழிப்பண்ணையால் அப் பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

இதனால் இப் பகுதியில் கடுமையான சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. பண்ணையின் கழிவுகளில் இருந்து பெருகும் இலையான்கள் அருகில் உள்ள வீடுகளில் குவிந்து காணப்படுகின்றன. உணவுப் பொருட்கள் மற்றும் பாத்திரங்களில் இலையான்கள் விழுகின்றன.

இந்த நிலையினால் இப் பகுதியில் உள்ள மக்களுக்கு வாந்திபேதி, வயிற்றோட்டம், காய்ச்சல் போன்ற தொற்று நோய்கள் ஏற்பட்டுள்ளன. அனுமதியின்றி சட்ட விரோதமாக நடாத்தப்படும் இந்த கோழிப் பண்ணையை மூடுமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தக் கோழிப் பண்ணை சுகதாரத்துறை மற்றும் பிரதேச சபை என்பனவற்றின் அனுமதியின்றி நடாத்தப்படுவதாக கூறப்படுகின்றது.

இதேவேளை இந்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியபோதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பிரதேச மக்கள் கூறுகின்றனர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.