விமானத்தைக் கயிறுகட்டி இழுத்த பொலிசார் (வைரல் வீடியோ உள்ளே)

0
267

ஏர்பஸ் விமானத்தை கயிறு கட்டி இழுத்து துபாய் பொலிசார் வித்தியாசமான சாதனையினை நிகழ்த்தியுள்ளனர். இந்த சாதனை கின்னஸ் வரை சென்றுள்ளது.

உலகிலேயே மிக பெரிய பொதுச்சேவை விமானமான ஏர்பஸ் ஏ380 (Airbus A380) துபாயில் உள்ளது.

சுமார் 3.02 லட்சம் எடை உடைய இந்த விமானத்தை 56 துபாய் விமான நிலைய பொலிசார் கயிறு கட்டி இழுத்துள்ளனர்.

இதேவேளை இதற்கு முன் 2011 ஆம் ஆண்டு ஹாங்காங்கில் 2.18 லட்சம் கிலோ எடை உடைய விமானத்தை 100 பேர் சேர்ந்து இழுத்திருந்தனர்.

இந்த சாதனை பெரியளவில் பேசப்பட்டது. தற்போது இந்த சாதனையை துபாய் பொலிஸார் முறியடித்துள்ளனர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.