அதிபரைத் தேடி அவரது மனைவி பாடசாலைக்கு சென்று மண்ணெண்ணை ஊற்றி கொழுத்த முற்பட்ட பெண்ணால் பதற்றம் – யாழில் சம்பவம்!

0
321

அதிபராக கடமையாற்றும் தனது கணவன் சில நாள்களாக வீட்டுக்கு வராத காரணத்தால் அவரை பாடசாலைக்குத் தேடிச்சென்று மண்ணெண்ணை ஊற்றி கொழுத்த முற்பட்ட பெண்ணால் யாழ் நகரப் பாடசாலை ஒன்றில் பதற்றம் ஏற்பட்டது.

யாழ் மாநகரப் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கடமையாற்றும் அதிபர் ஒருவர் கடந்த விடுமுறை தினங்களான மூன்று நாள்களும், தனது வீட்டுக்கு செல்லாமல் வேறு இடத்தில் தங்கியுள்ளார்.

இவர் கடந்த திங்கட்கிழமை வீட்டுக்கு வருவார் என எதிர்பார்த்த மனைவி அவர் அன்றைய தினமும் வராத காரணத்தினால், நேற்று செவ்வாய்க்கிழமை நேரடியாக அவர் பணியாற்றும் பாடசாலைக்கு சென்றுள்ளார்.

தன் உடமையில் மண்ணெண்ணையும் அந்தப் பெண் கொண்டு சென்றுள்ளார்.
நேரடியாக அதிபரின் (கணவரின்) அலுவலகத்துக்குள் சென்ற அவர், அதிபரைத் தள்ளி வீழ்த்திய பின்னர் தான் கொண்டு சென்ற மண்ணெண்ணையை கணவர் மேல் ஊற்றிவிட்டு தன் மேலும் ஊற்றியுள்ளார்.

அப்போது அவ் இடத்துக்கு வந்த ஆசிரியர்கள், அருட்சகோதரி ஆகியோர் அதை தடுத்து நிறுத்தி அந்தப் பெண்ணை ஆசுவாசப்படுத்தியுள்ளனர். பின்னர் அவ் இடத்துக்கு வந்த பழைய மாணவர்கள் அமைதிப்படுத்தி அனுப்பியுள்ளனர்.

குறித்த அதிபர் 50 வயதுடையவர். அவருக்கு இரு பிள்ளைகள் உள்ளார்கள். இருப்பினும் இவர் வேறு வீட்டில் தங்கியிருந்ததால் மனைவி ஆத்திரமடைந்து இந்த செயலை செய்துள்ளார் என்றும் சம்பவ இடத்தில் நின்றவர்கள் தெரிவித்துள்ளார்கள்

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.