‘நான் சிறுவயதில் கொலை செய்தேன்’: பிலிப்பைன்ஸ் அதிபர் பரபரப்பு பேச்சு

0
868

தனது 10 வயதில் ஒருவரை கத்தியால் குத்தி கொன்றதாக பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடெர்டி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடெர்டி அவ்வவ்போது அதிரடியான கருத்துக்களை தெரிவித்து வருகின்றார்.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் வருகை தரும் சமயத்தில், அமெரிக்கர்களை குரங்கு என்று ரோட்ரிகோ விமர்சனம் செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், வியட்நாம் நாட்டின் தனாங் நகரில் நடைபெறும் ஆசிய பசுபிக் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக டுடெர்டி அங்கு சென்றுள்ளார்.

அங்குள்ள பிலிப்பைன்ஸ் மக்கள் ஏற்பாடு செய்திருந்த கூட்டம் ஒன்றில் பங்கேற்ற அவர் தனது இளமைக்கால பருவம் குறித்து பல விஷயங்களை பேசினார்.

குறிப்பாக, தனது 16 வயதில் ஒருவரை குத்தி கொலை செய்ததாக அவர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாநாடு நாளை நடைபெற இருக்கும் நிலையில், அவர் இப்படி பேசியுள்ளது சர்ச்சையை உருவாக்கும் விதமாக அமைந்துள்ளது.

ஏற்கனவே, போதை மருந்து கடத்தல் காரர்களுக்கு மரண தண்டனை விதித்ததில் ஐ.நா.வுக்கும் டுடெர்டிக்கும் இடையே கருத்து மோதல் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.