மகனை கொன்றவனை மன்னித்து கட்டியணைத்த தந்தை

0
758

அமெரிக்காவில் மகனை கொன்றவனை கட்டியணைத்து 31 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றதற்காக தந்தை ஆறுதல் கூறிய சம்பவம் அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள கென்டக்கி மாநிலத்தில் பீசா டெலிவரி செய்யும் முஸ்லீம் இளைஞர் சலாகுதின் கடந்த 2015 ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ரெல்ஃபோர்ட் என்பவர் தான் குற்றவாளி என தெரிவிக்கப்பட்டது. அவருக்கு 31 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

201711101733426748_1_SalahuddinJitmoud._L_styvpf
சலாகுதின்

இந்நிலையில், நேற்று தீர்ப்பு வழங்கப்படும் போது இறந்து போன சலாகுதினின் தந்தை சோம்பட நீதிமன்றத்தில் இருந்தார்.

குற்றவாளிக்கு தண்டனை வழங்கப்பட்ட உடன் சோம்பட் ரெல்ஃபோர்டை கட்டியணைத்தார்.

மேலும் ‘என் மகன் மற்றும் மனைவி சார்பாக நான் உன்னை மன்னிக்கிறேன். கடவுள் உனக்காக புதிய வாழ்க்கையை கொடுத்திருக்கிறார். அதை சரியாக பயன்படுத்திக் கொள்’ எனக் கூறினார்.

அதற்கு பதில் அளித்த ரெல்ஃபோர்ட் நான் ‘செய்த தவறுக்கு என்னை மன்னித்து விடுங்கள். நீங்கள் இழந்ததை என்னால் திருப்பி தர முடியாது’ என வருத்தத்தோடு சோம்பட்டிடம் தெரிவித்தார்.

மகனை கொன்றவரை கட்டியணைத்து 31 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றதற்காக தந்தை ஆறுதல் கூறிய சம்பவம் அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.