கொதிக்கும் எண்ணையை வாடிக்கையாளர் மீது ஊற்றிய உணவக உரிமையாளர் – வைரல் வீடியோ..!!

0
886

மும்பையின் உல்ஹாஸ்நகரில் சாலையோரத்தில் சைனீஸ் உணவு கடையில் இளைஞர் ஒருவர் தனது நண்பர்களுடன் சாப்பிட சென்றிருந்தார்.

சாப்பிடும் போதே உணவு நன்றாக இல்லை என இளைஞர் கடை உரிமையாளரிடம் பிரச்சனை செய்துள்ளார். சாப்ப்பிட்ட பின்னர் பில் கொடுப்பதிலும் பிரச்சனை வந்துள்ளது. இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதில் அந்த இளைஞர் கடை உரிமையாளர் மீது ஏதோ பொருளை தூக்கி எறிந்தார். இதனால் கோபமடைந்த உரிமையாளர் கடையில் இருந்த சூடான எண்ணையை இளைஞர் மீது ஊற்றியுள்ளார்.

மேலும் அவர்கள் நண்பர்கள் மீதும் ஊற்றினார். இதில் அந்த வாலிபர் படுகாயமடைந்தார்.

இந்த சம்பவம் குறித்து வித்தால்வாடி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அவர்கள் நடத்திய விசாரணையில் இளைஞர் மீது சூடான எண்ணெய் ஊற்றியது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் இந்த சம்பவம் பதிவாகியிருந்தது. அந்த வீடியோவை ஆதாரமாக வைத்து, 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.