கணவர் 8-ம் வகுப்பு; மனைவி எம்.டெக்! பெண்ணின் உயிரைப் பறித்த ஈகோ

0
762

திருச்சி தில்லைநகரில் பெண் ஒருவர் தற்கொலை பெரும்பரபரப்பை உருவாக்கியுள்ளது.

திருச்சி தில்லைநகர் எம்.எம் அடுக்குமாடியில் குடியிருப்பவர் கணபதி. ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் இவருக்கு, அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகில் உள்ள கண்டிராதித்தம் கிராமம்தான் சொந்த ஊர்.

இவருக்கும் அரியலூரைச் சேர்ந்த ஜனனி என்பவருக்கும் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டுத் திருமணம் நடந்தது.

திருமண வாழ்வில், இவர்களுக்கு 3 வயதில் அக்‌ஷய் கவுதம் மற்றும் ஒன்றரை வயதில் ரிதன்யா என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 6-ம் தேதி இரவு கணபதி தனது ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் இருந்து வீட்டுக்குச் சென்றபோது, அவர் மனைவி ஜனனி தூக்கில் தொங்கியதாகவும் அவரைக் காப்பாற்றி, அருகில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு ஜனனியைக் கொண்டு சென்றார்.

அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், ஜனனி ஏற்கெனவே இறந்துவிட்டதாகவும், பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும்படியும் கூறியுள்ளார்கள்.

ஆனால் கணபதி, ஜனனியின் உடலை மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல், அவரின் சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் திருமானூரை அடுத்த கண்டிராதித்தம் கிராமத்துக்கு கொண்டு சென்றார்.

அந்தக் கிராமத்திலேயே ஜனனியின் உடலை எரிப்பதற்கான ஏற்பாடுகள் நடந்தது. இதனிடையே திருச்சி தில்லைநகர் போலீஸார், ஜனனியின் மரணம் குறித்து தகவல் அறிந்ததும், கண்டிராதித்தம் கிராமத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டதோடு, நள்ளிரவாக இருந்தபோதும் ஜனனியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனர்.

போலீஸாரின் வருகையைத் தெரிந்துகொண்ட கணபதி அங்கிருந்து தப்பித்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் ஜனனியின் தந்தை காமராஜ், “ஜனனியின் மரணத்தில் மர்மம் உள்ளதாகவும் தான் திருமணத்தின்போது ஜனனிக்கு 60 பவுன் நகையும் ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருள்களும் கொடுத்தேன்.

கூடுதல் வரதட்சணைக் கேட்டு கணபதி மற்றும் அவருடைய குடும்பத்தினர்தான் என் மகளைக் கொலை செய்திருக்கலாம்.

இதை மறைக்கவே ஜனனியின் உடலை எரிக்க முயற்சி செய்திருப்பதாகவும், மகளின் மரணத்துக்குக் காரணமான கணபதி மற்றும் அவரின் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதுதொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்த திருச்சி போலீஸார், கணபதியைக் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். ஜனனிக்குத் திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் வருவாய்துறை விசாரணை நடத்தி வருகிறது.

மேலும், போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில், கணபதி 8-ம் வகுப்புவரை படித்திருப்பதும், ஜனனி எம்.டெக் படித்து முடித்திருந்தார்.

மாப்பிள்ளை குறைவாகப்  படித்திருந்தாலும், ஜனனி சார்ந்த சமுதாயத்துக்குள்ளேயே இருப்பதும், ரியல் எஸ்டேட் தொழிலில் செல்வாக்கு மிகுந்த நிலையில் கணபதிக்கு காமராஜ் பெண் கொடுத்துள்ளார் எனத் தெரிகிறது.

ஜனனி, அடிக்கடி அவரின் பெற்றோரை பார்க்கச் செல்வார் என்றும், அப்படிப் போவதால், குடும்பத்துக்குள் சண்டை வலுத்து வருவதாக நினைத்த கணபதி, தனது மனைவியை அவரின் சொந்த ஊருக்குச் செல்லக்கூடாது கறார் காட்டி வந்தார்.

சம்பவத்தன்று காலை ஜனனி, கணபதியின் சொந்த ஊரில் உள்ள பெற்றோரை பார்க்கச் செல்வதாக கூறியதாகவு, அதற்குக் கணபதி, மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதில், இப்படியே செய்தால் நான் செத்துப்போவேன் என ஜனனி கூறினாராம்.

அதனையடுத்து கணபதி, ரியல் எஸ்டேட் அலுவலகத்துக்குச் சென்றுவிட்டதாகவும், திரும்பி வந்து பார்த்தபோது ஜனனி, தூக்கில் தொங்கியபடி இருந்தார்.

இருவருக்குள்ளும் ஈகோ பிரச்னையால் அடிக்கடி பிரச்னைகள் இருந்து வந்தது. அந்த ஈகோவால் ஏற்பட்ட ஜனனியின் மரணத்தால் இரண்டு பிஞ்சு குழந்தைகள் தாயை இழந்து நிற்கிறது என்றார்கள்.

இந்த விவகாரம் தொடர்பாக வரதட்சணை கேட்டு மனைவியைத் துன்புறுத்தி கொன்றதாக கணபதி மீது வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்துள்ளதாகக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.