சைக்கிளில் வந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள்; பாராளுமன்ற வளாகத்தில் சுவாரசியம் (படங்கள்)

0
781

நாட்டின் மிக முக்கியமான தருணத்திலும், கூட்டு எதிர்க் கட்சிகள் காலோசிதமாகத் தமது எதிர்ப்புகளை வெளிக்காட்டத் தவறவில்லை.

அடுத்த ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் இன்னும் சில நிமிடங்களில் பாராளுமன்றில் வாசிக்கப்படவிருக்கிறது.

இந்த நிலையில், நாட்டில் கடந்த சில தினங்களாக ஏற்பட்டிருக்கும் எரிபொருள் தட்டுப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில், கூட்டு எதிர்க்கட்சியினர் துவிச்சக்கர வண்டிகளில் பாராளுமன்றுக்கு வருகை தந்துள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

துவிச்சக்கர வண்டிகளில் வந்த எதிர்க்கட்சி உறுப்பினர்களைக் கண்டு தாம் முதலில் திகைத்தபோதும், பின்னர் அவர்களது சமயோசித எதிர்ப்புத் திட்டத்தை எண்ணி சிரித்ததாகவும் அவை உறுப்பினர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

23376533_1764593550511687_5029776938189303639_n23316342_1770197699657346_8625854937057531211_n23319454_1764593597178349_8889823547172256670_n23435001_1997354550539787_876956959854712884_n1

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.