விநாயகருக்கு முதல் வழிபாடு ஏன்?

0
492

விநாயகரை வழிபாடு செய்தாலே, அனைத்து தெய்வங்களையும் வழிபட்ட பலன் நமக்கும் கிடைத்துவிடும். இது குறித்து விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

முப்பது முக்கோடி தேவர்களுக்கும், முப்பெரும் தெய்வங்களுக்கும் முதன்மையானவர் விநாயகப் பெருமான். ‘ஓம்’ என்ற பிரணவப் பொருளின் உருவத்தைக் கொண்டவராக இருப்பவர் அவர்.

விநாயகரின் தொந்தி பிரம்மனின் அம்சமாகவும், முகம் திருமாலின் அம்சமாகவும், உடலின் இடப்பாகம் பார்வதியின் அம்சமாகவும், வலப்பாகம் சூரியனின் அம்சமாகவும், மூன்று கண்கள் ஈஸ்வரனின் அம்சமாகவும் விளங்குவதாலேயே முதலில் விநாயகரை வழிபடுகிறோம்.

விநாயகரை வழிபாடு செய்தாலே, அனைத்து தெய்வங்களையும் வழிபட்ட பலன் நமக்கும் கிடைத்துவிடும்.

கோவிலில் நமது பெயரில் அர்ச்சனை செய்வது நல்லதா?

201711081542148496_temple-archana_SECVPF.gifகோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்யும் போது நமது பெயருக்கு செய்வது நல்லதா? இறைவன் பெயரில் செய்வது நல்லதா? என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.

அர்ச்சனை என்றால் என்ன? இறைவனின் புகழை மனதார வாயார பாடுவதாகும். அப்படி பாடும் போதே நமது குறைகளையும் அவனிடம் முறையிடுவது தான் அர்ச்சனை செய்வதன் தாத்பரியம்.

கடவுள் நமக்கு தந்த நன்மைக்காக நன்றி செலுத்த வேண்டுமென்றால் அவர் பெயரில் அர்ச்சனை செய்யலாம். அவரிடம் ஏதாவது விண்ணப்பம் வைக்க வேண்டுமென்றால் நம் பெயரில் செய்யலாம்.

ஆனால் கடவுளுக்கு நம் கோரிக்கை தெரியாதா என்ன? எனவே பொதுவாக அவர் பெயரிலேயே செய்து விடுவது தான் சாலச்சிறந்தது ஆகும்

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.