இடது கை வெட்டப்பட்ட நிலையில் பெண ஒருவர் சடலமாக மீட்பு

0
133

 

பொகவந்தலாவ டின்சின் தோட்டத்தில் 03ம் இலக்க லயன் குடியிருப்பில் இருந்து வெட்டு காயங்களுடன் வயோதிப பெண் ஒருவரின் சடலம் ஒன்று 08.11.2017. புதன் கிழமை காலை 07மணி அளவில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,

மூன்று பிள்ளைகளின் தாயான 63 வயதுடைய பழனியாண்டி சின்னம்மா என்பவரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இடது கையின் மணி கூடு கட்டும் பகுதியில் கத்தியினால் வெட்டப்பட்ட நிலையிலே குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை குறித்த வயோதிப பெண் நித்திரை செய்து கொண்டிருந்த அறையில் அதிகளவிலான இரத்தம் காணப்படுவதாகவும் தெரிவிக்கபடுகிறது.

ஹட்டன் நீதிமன்ற நீதவான் சம்பவம் இடம் பெற்ற இடத்திற்கு வரவழைக்கபட உள்ளதாகவும், நீதவானின் மரண விசாரனைகள் இடம் பெற்ற பின் சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக சடலம் நாவலப்பிட்டி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இது கொலையா அல்லது தற்கொலையா என்பதை கண்டறிவற்காக சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.