கொழும்பு வீதியில் அச்சத்தை ஏற்படுத்திய மனித கால்கள்

0
917

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் சடலம் ஒன்று இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.

மாவனல்ல இலங்கை போக்குவரத்து சபைக்கு அருகிலுள்ள வாய்க்கால் ஒன்றிலிருந்து சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சடலத்தின் கால்கள் மாத்திரம் வெளியில் தெரிந்துள்ள நிலையில், அந்தப் பகுதியில் சென்ற பலர் அச்சமடைந்துள்ளனர்.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpgssssssகுறித்த நபர் வாய்க்காலிற்குள் விழுந்து உயிரிழந்துள்ளாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது கிடைத்துள்ள தகவல்களுக்கமைய இந்த நபர் மானவல்ல பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

பிரேத பரிசோதனைக்காக சடலம் மாவனெல்ல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.